பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/879

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polysomy

878

pons varoli


நிலைகளில் தூக்கம் வருநிலை, தூக்கப்பிரி நிலையளவு மூச்சு நிறுத்தல் ஆகியவை தொடர்ந்து ஈ.சி.ஜி. ஈ.ஈ.ஜி, ஈ.ஓ.ஜி, (மின் கண்வரை பதிவு) ஈ.எம்.ஜி., (மின்தசை வரைபதிவு) ஆகியவைகளைக் கண்காணிக்கப் படும் சோதனை முறை.

polysomy : பலநிறக்கோலிமை : இயல்பான ஒன்றிணையில் மேற்பட்ட எண்ணிக்கையில் நிறக்கோல்கள் இருத்தல்.

polyspermia : விந்துப்பெருக்கம் : இயல்புக்கு மீறி மிக அதிக அளவு விந்து நீர் கரத்தல்.

polystyrene : பாலிஸ்டிரீன் : பல்(மருத்துவத்தில்) தளம் உருவாக்கப் பயன்படும் ஒரு ஸ்டிரீனை மீச்சேர்வ இணைவின் மூலம் தயாரிக்கப்படும் ஒரு கூட்டினைப் பொருளான (ரெசின்) பிசின் வகை.

polythiazide : பாலித்தயாசிடு : சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கும் மருந்து.

polyuria : மிகைச் சிறுநீர்ப்போக்கு; சிறுநீர் மிகைப்பு; சிறுநீர்ப் பெருக்கு : சிறுநீர் அளவுக்கு அதிகமாகக் கழிதல்.

Pomeroy sterilisation : போமராய் கருத்தடை : வயிற்றைத்திறந்து கருப்பைக் குழல்களின் நடுப்பகுதியைக் கட்டிவெட்டும் முறைக்கு அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் ஆர்.போமராயின் பெயர்.

Pompe's disease : போம்பே வியாதி : 1. கிளைக்கோஜன் சேர்ப்பு வியாதியின் இரண்டாம் வகை, 2. தசை வீக்கமும், மனக்கோளாறும் முக்கிய அறிகுறிகளாக இனம் குழந்தைகளில் விரைவில் மரணமடையச் செய்யும் நோய்.

pompholyx : தோல் கொப்புளம்; தோல் குமிழ்வு : தோலில் உண்டாகும் குமிழான கொப்புளம். இதனால் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படும்.

POMR : சிக்கல் சார்ந்த மருத்துவ வரலாறு.

Ponderax : பாண்டெராக்ஸ் : ஃபென்ஃபுளூராமின் ஹைட்ரோ குளோரைடு என்ற மருந்தின் வணிகப்பெயர்.

pons : திசுப்பாலம்; முகுளம்; மூளைப்பாலம் : மூளையின் இரு பாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப் பட்டை.

ponstan : பான்ஸ்டான் : மெஃபினாமிக் அமிலத்தின் வணிகப் பெயர்.