பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/890

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

preeruption

889

premature


மருட்சி; இளம் பேற்றுச் சன்னி : பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தின் பிற்பகுதியில் சிறு நீர்ப் புரத நோய், மிகை இரத்த அழுத்தம், இழைம அழற்சி போன்றவை தோன்றும் நிலை. உடல் வீக்கம், சிறுநீரில் புரதம், இரத்தக் கொதிப்பு ஆகிய மூன்று நோய் நிலைகளின் கூட்டு நிலை. தொடர்ந்து அதிகரித்து கருவுக்கும் தாய்க்கும் ஆபத்து உண்டாக்குதல்.

preeruption : முளைமுன்நிலை : 1. பல்முளைக்கு முன்னால் 2. பல் முனை எலும்புக்குள்ளிருக்கும், பல் முளைப்பதற்கு முந்திய நிலை.

preexcitation : முன்இளர்நிலை : மேலதிக வழிப்பாதையின் வழி யில் பரவும் தூண்டல்களால் இதயக்கீழறையின் ஒரு பகுதி முன்கூட்ட செயலூட்டப்படும் நிலை.

pregnancy : கர்ப்பம்; சூல்; கருவுற்ற நிலை; சினை படல் : கருப்பையில் குழந்தை கருவுயிர்த்திருக்கும் காலம். இது பெரும்பாலும் 40 வாரங்கள் அல்லது 280 நாட்கள் ஆகும்.

pregnandiol : பிரக்னேன்டியால் : பிராஜஸ்டிரோனிலிருந்து எடுக்கப் படும் சிறுநீரைச் சுரக்கும் பொருள்.

pregnanetriol : பிரெக்னேன்ட்ரியால் : உயிரியல் முறையில் செய லற்ற சிறுநீரில் வெளிப்படும் வளர்சிதை மாற்றப் பொருளான 17 ஹைட்ராக்ஸி புரோகெஸ் டிரான் (கருவளர்ப்பி).

pregnant : கருவுற்ற; சூல் கொண்ட.

pregnyl : பிரக்னில் : கருப்பைக்கு வெளியில் விதைப்பை இறங்குங் காலம் க்கும்போதுபயன்படுத்தப் படும் மருந்தின் வணிகப் பெயர்.

Preiser's disease : பிரெய்செர் வியாதி : முதுகுப்பட்டை எலும்பின் தொற்றிலா திசுவழிவு, ஜெர்மன் கதிர்ப்படவியலார், ஜார்ஜ் பிரெய்சரின் பெயரால் அழைக்கப் படுகிறது.

preleukaemia : வெள்ளணுப் புற்றுமுன்நிலை : குருதியில் அல்லது எலும்புச்சையிலுன்ன முதிர்ச்சியடையா அணுக்கள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்படுதல்.

preload : பளு முன் : சுருங்குவதற்கு முன் இதயத் தசையின் நீட்சியளவு.

prelymphoma : முன்நிணப்புற்று : நிணவனுக்கள் திரண்டு நிணப் புற்றாக மாறக்கூடிய சூழ்நிலை.

premarin : பிரிமாரின் : மாதவிடாய் நிறுத்தக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்தின் வணிகப் பெயர். இது வாய்வழி கொடுக்கப்படுகிறது.

premature : பருவமடையா; முதிர்வுறா : பருவ நிலை பெறா.