பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/899

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proflavine

898

projection


proflavine : புரோஃபிளேவின் : ஒரு நோய் நுண்மத்தடை மருந்து அக்ரிஃபினேவின் என்ற மருந்தினைப் பெரிதும் ஒத்தது.

progeria : முதிராமுதுமை : குழந்தைப் பருவத்திலேயே, முன்கூட்டியே முதுமை மாற்றங்கள், வயதானவர்களில் காணப்படுவது போன்று பூப்புப் பருவத்திலேயே தோன்றி, 20 வயதிலேயே முதுமையால் மரணமடைதல்.

progestational : கர்ப்பத்திற்குச் சாதகமான : கருவுறுதலுக்குச் சாதகமான.

progesterone : புரோஜெஸ்டிரோன் : கருப்பைக் குருதிப் போக்கினைக் குணப்படுத்தப் பயன்படுத்தும் இயக்குநீர் (ஹார்மோன்). கருச்சிதைவினைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. தசைவழி ஊசிவழி செலுத்தப் படுகிறது.

progestin : புரோஜெஸ்டின் : புரோஜெஸ்டீரான் போன்று செயல்படக்கூடிய ஒரு இயல்பான அல்லது செய்முறை கூட்டுப் பொருள்.

progestogen : புரோஜெஸ்டோஜென் : புரோஜெஸ்டிரான் போன்று அதே மாதிரி விளைவுகளை உண்டாக்கும் ஒரு இயக்குநீர்ப் பொருள்.

proglottis : நாடாப் புழு : பாலுறவில் முதிர்ச்சியடைந்த நாடாப் புழுவின் பகுதி.

prognathic : தாடைத்துருத்தம் : 1. துருத்திக் கொண்டிருக்கும் தாடையைப் பெற்றிருப்பது. 2. ஒன்று அல்லது இரண்டு தாடைகளும் முன் துருத்தியிருத்தல்.

prognosis : முன்கணிப்பு; முன்னறிதல்; வருநிலை அறிதல் : ஒரு நோய் எப்போது குணமாகும் என்பது பற்றிய முன் கணிப்பு.

prognostic : முன்கணிப்பு : ஒரு நிலை எப்படி முடியும் என்று முன்கூட்டியே கணிக்க முயலும் ஒரு பகுத்தாய்வு முறை.

programmed killing : திட்டமிட்ட அழிப்பு : மூளையின் ஆரம்ப வளர்ச்சி நிலையில், மிகுதியாக உருவான நரம்பணுக்களை தேர்ந்தெடுத்து அழித்தல்.

proguanil : புரோகுவானில் : முறைக் காய்ச்சலுக்கு எதிரான ஒரு செயற்கை மருந்து.

proinsulin : இன்சுலின் முன்நிலை : 'ஏ' மற்றும் 'சி' சங்கிலிகள் சி-பெப்டைடுடன் இணைந்து உள்ள, இன்சுலின் உருவாவதற்கு முந்திய பொருள்.

projectile vomiting : குமட்டல் வாந்தி : கபாலத்துள் அழுத்தம் அதிகரிப்பதால், குமட்டல் வராமலே, உண்டாகும் வேகமான வாந்தி.

projection : பிறழ்ச்சி அறிவு முன் வீச்சு : இயல்பான மக்களிடம்