பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aidoiomania

89

akinesia


நோய். (Acquired Immune Deficiency Syndrome).

aidoiomania : இயல்பிலா பாலுணர்வு.

aids related complex : எய்ட்ஸ் சார்ந்த கோளாறுகள் : வெளிப் படையான ஈட்டிய நோய்த் தடைக்காப்பு நோயைவிடச் சற்று கடுமை குன்றிய நோய் நிலை. எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பீடித்த சிலரிடம் இந்தக் கோளாறு காணப்படும். இதன் நோய்க்குறி புலனாகாமல் இருக்கும் அல்லது இது காய்ச்சலின் தன்மையுடையதாக இருக்கும்.

ailment : நோயுறல்; நோவு; உடல் நலிவு; நோய், பிணி

ainhum : கால்விரல் சூம்புதல்; விரல் நோய்.

air : காற்று : பூமியைச் சூழ்ந்திருக்கும் வாயுமண்டலமாக உருவாகியுள்ள வாயுக்கலவை. இதில்78% நைட்ரஜன், 20%ஆக்சிஜன், 0.4% கார்பன் டையாக்சைடு, 1% ஆர்கான், ஒசோன், நியோன், ஹீலியம், முதலி யவற்றின் சிறுசிறு அளவுகள், பல்வேறு அளவிலான நீராவி ஆகியவை அடங்கியுள்ளன.

air-borne : ஏர்-பான் : 'அசிட்டில் சிஸ்டைன்' என்பதன் வணிகப் பெயர்.

air-borne disease : காற்றால் பரவும் நோய்.

air cell : காற்றறை.

air-conditioning : குளிர் பதனம்; குளிரூட்டி.

air-hunger : காற்றுத் தேவை; காற்றுப் பசி; மூச்சேங்கல், காற்று வேட்கை.

air-sinus : காற்றுப்புரை.

air tight : காற்றுப் புகாத.

air way : காற்றுக்குழாய்; காற்று வழி : நுரையீரல் காற்றுக் குழாய். காற்று செல்லும் பாதை, நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையைச் சரியான அளவில் (தடை ஏதுமின்றி) வைத்திருக்க உதவும் ஒரு கருவி.

akaryocyte : உயிரணுக்கரு அற்ற ஓர் அணு : (எடு) இரத்தச் சிவப்பணு

akatama : நாட்பட்ட புற நரம்பு அழற்சி.

akatamathesia : புரிந்துணர் குறை.

akathisia : கட்டளை நரம்புத் துடிப்பு; உட்கார இயலாமை : தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான கட்டளை நரம்பு (இயக்கு தசை) எப்போதும் படபடவெனத் துடித்துக் கொண்டிருக்கும் நிலை. நரம்புக் கோளாறுகளுக்கான மருந்துகளின் பக்க விளைவு காரணமாக இது உண்டாகக்கூடும்.

akinesia : இயக்கக் குறை.