பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/928

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

radiculography

927

radioiodinated..


radiculography : வேர் ஊடு கதிர்ப்படம் : முதுகந்தண்டு நரம்பு வேர்கள் ஊடுகதிர் (எக்ஸ்ரே) படம். இந்த வேர்களைக் கதிர் ஊடுருவாதவாறு செய்து, அந்த வேர்களின் ஊடு கதிர்ப்படம் எடுக்கப்படுகிறது. நெகிழ்ச்சியடைந்த இடை முதுகெலும்பு வட்டச் சில்லின் இடத்தையும், அளவையும் கண்டறிய இப்படம் எடுக்கப்படுகிறது.

radioactive : கதிரியக்கப்பொருள்; கதிரியக்க : அணுக்கரு மையம் உறுதியற்றிருப்பதால் வெப்பக் கதிர்களைவீசக்கூடிய பொருள். நுரையீரல் நோய்களை ஆராய கதிரியக்கத் தங்கம் பயன்படுத்தப் படுகிறது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு) கதிரியக்க அயோடின் இருக்கிறது. இதனை அளவிட்டு அறியலாம்.

radiobiology : கதிரியக்க உயிரியல் : உயிருள்ள திசுக்களின்மீது கதிரியக்கத்தின் விளைவுகளை ஆராயும் அறிவியல்.

radiocaesium : கதிரியக்க சீசியம் : சீசியம் என்ற தனிமத்தின் கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரு வடிவம்; இது, நோய்களுக்கான கதிரியக்க மருத்துவத்தில் பயன்படுகிறது.

radiocarbon : கதிரியக்க கார்பன் : கார்பன் (கரியம்) என்ற தனிமத்தின் கதிரியக்க வடிவம். இது, வளர்சிதை மாற்றம் பற்றிய ஆராய்ச்சியில் பயன்படுகிறது.

radiogram : ஊடுகதிர் ஒளிப்படம்.

radiograph : ஊடுகதிர் படம்; ஊடுகதிர் வரைபடம்; கதிர் வரை படம் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம். ஊடுகதிர்களைக் கொண்டு ஒளிப்படம் எடுத்தல்.

radiographer : ஊடுகதிர் வல்லுநர்; ஊடு கதிர்ப்படப் பதிவாளர்; கதிர் வரைவாளர் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) நோய்களைக் கண்டறிவதிலும், நோய் மருத்துவத்திலும் தகுதி பெற்ற வல்லுநர்.

radiography : கதிர் விரைவியல்; கதிர் வீச்சு ஒளிப்பட வரைவி; ஊடு கதிர்ப் படமெடுப்பு; ஊடு கதிரியம் : நோய்களைக் கண்டறிய ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம் எடுத்தல்; மருத்துவ ஆலோசனைப்படி, உக்கிரமான நோய்களுக்கு ஊடுகதிரைப் பயன் படுத்தி மருத்துவம் செய்தல்.

radioiodinated human serum albumin (RIHSA) : கதிரியக்க அயோடினேற்றிய குருதி நிணநீர்க் கருப்புரதம் : மூளை நைவுகளைக் கண்டறிவதற்கும், இரத்தம் மற்றும் குருதிநீர் அளவுகளைக் கண்டறிவதற்கும், சுற்றோட்ட நேரம், இதய வெளிப்பாடு ஆகியவற்றை அளவிடுவதற்கும் பயன்படுகிறது.