பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alkalosis

97

allantoin


alkalizer : அமிலக்காரச் சமன் பாடாக்கி : அமிலக்காரச் சமன் பாடாக்கப் பயன்படும் ஒரு பொருள்.

alkaloid : காரகம் : ஒரு காரப்பொருளை ஒத்திருக்கிற பொருள். தாவரங்களில் காணப்படும் கரிம மூலப்பொருள்களின் ஒரு பெருந் தொகுதியைக் குறிக்கிறது. இவை முக்கியமான உடலியல் வினைகளைப் புரிகின்றன. மார்ஃபின், கொய்னா, காஃபின், ஸ்டிரைக்கிளின் ஆகியவை முக்கியமான ஆல்க்கலாய்டுகள்.

alkalosis : காரச்சார்பு நோய்; காரத் தேக்கம் காரமிகை : உடலில் காரப்பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் அமிலங்கள் குறைவாக இருப்பதால் உண்டாகும் நோய். காரப்பொருளை மிகுதியாக உட் கொள்ளுதல், அளவுக்கு மேல் வாந்தியும் பேதியும் ஏற்படுதல், அடக்கிய உணர்ச்சி திடீரென வெளிப்படுதல் போன்ற பல காரணங்களால் இது உண்டாகிறது. 'நரம்பிசிவு நோய்' எனப்படும் நரம்பு-தசைக் கிளர்ச்சியும் இதனால் ஏற்படுகிறது.

alkalotherapy : காரக மருத்துவம்.

alkaluria : காரகச் சிறுநீர்.

alkepton : ஆல்கெப்டான்.

atkaptonuria : அல்காப்டானூரியா; அல்காப்டன் சிறுநீர் : சிறு நீரில் 'ஆல்காப்டோன்' எனப்படும் ஹோமேஜென்டிசிக் அமிலம் இருத்தல். இதனால், ஃபெனிலா லைனின், டைரோசின் ஆகிய இரண்டும் ஒரு பகுதி மட்டுமே ஆக்சிகரணமாகின்றன. இதனால் வேறு தீயவிளைவுகள் ஏற்படுவ தில்லை.

alkeran : அல்கெரான் : 'மெல்பாலன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

alkyl : அல்கைல் : இது ஒரு மோனோவேலண்ட் ஹைட்ரோ கார்பன்.

alkylating agents : ஆல்கைலேட்டிங் வினையூக்கிகள் : கரு மையத்திலுள்ள 'டி.என்.ஏ' (DNA)யுடன் அல்கேயில் தொகுதிகளைச் சேர்த்து டி.என்.ஏ.-ஐப் பாதிப்பதன் மூலம் உயிரணுப் பகுப்பு நடவடிக்கையைச் சீர்குலைக்கும் பொருள்கள். இவற்றில் சில, உக்கிரமான உயிரணு வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுகின்றன.

alkylation : காரமாக்கல் : ஹைட்ரஜன் அயனிகளுக்கு மாற்றாக கார அயனிகளைச் சேர்த்தல்.

allantochorion : பனிக்குடமும் கரு வெளியுறை : பனிக்குடமும் கருவெளியுரையும் இணைவதால் உண்டாகும் கருவெளிச் சவ்வு.

allantoid : பனிக்குடம் போன்ற.

allantoin : பனிக்குடநீரிலும் சிசுவின் சிறுநீரிலும் காணப்படும் ஒரு பொருள்.