பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

23


கேம்பிரிட்ஜ், பல்கலை கழகத்தில் படித்து, பிறகு காயஸ் என்ற கல்லூரியில்1597-ஆம்ஆண்டில்மருத்துவப் பட்டம் பெற்றார்.

காயஸ் கல்லூரியில் அவர் மருத்துவத் துறைப் படிப்பைப் பெற்றபோதே, வில்லியம் ஹார்வி அந்தத் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும் கல்வி கற்று வந்தார்.

இத்தாலியில் உள்ள ‘இத்தாலிப் பல்கலைக் கழகம்’ அப்போது மருத்துவத் துறையில் புகழ் பெற்றிருந்ததால், அக் கல்லூரியிலே ஹார்வி சேர்ந்து மருத்து மாணவர் கல்வியைத் தொடர்ந்தார்.

கலீலியோ குரு, ஹார்வி மாணவர்!

உலகத்தில் சிறந்த மருத்துவக் கல்லூரியாகத் திகழ்ந்த பாதுவா கல்லூரியிலே; வில்லியம் ஹார்வி சேர்ந்துப் படித்த போது; புகழ்பெற்ற விஞ்ஞானி கலீலியோ பேராசிரியராகப் பணியாற்றினார். அக் கல்லூரி ஆய்வுக் கூடங்களில் ஆராய்ச்சி செய்வதற்கான எல்லாவசதிகளும் இருந்தன. அதனால் ஹார்வி அந்த ஆய்வுக் கூடங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

அந்தக் கல்லூரியில் பெப்ரீசியஸ் என்ற மேதை உடற்கூறு இயல்களை ஆய்வதிலும், ஆய்வு செய்த கருத்துக்களை மற்ற மாணவர்களுக்குத் தனது சொற்பொழிவு மூலம் உரையாற்றி விளக்குவதிலும் வல்லவராக விளங்கினார். பாதுவா கல்லூரியில் 1602-ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்று ஹார்வி இலண்டன் நகர் திரும்பினார்.

பெப்ரீசியஸ் என்ற அந்த மேதை ஆற்றிய உடற்கூறு உரைகளை வில்லியம் ஹார்வி அடிக்கடிக் கேட்டுக் கேட்டு, நுண்ணியக் கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டு, பிறகு அதையே ஆராய்ச்சியும் செய்து பார்த்து உண்மைகளை ஒப்பிட்டு உணர்வார்.

அதனால், அவரையே தனது உடற் கூறு ஆய்வுக்குரிய ஆசானாக ஏற்றுக் கொண்டு, சுருக்கமாகக் கூறுவதானால், தனது