பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மருத்துவ விஞ்ஞானிகள்எதையும் ஆராயும் அறிவு லிஸ்டர்க்கு இளம் பருவத்திலேயே இருந்து வந்ததால், அவரது கல்வியிலும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும், அதே பழக்கம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுவது தானே?

எந்த விலங்குகளின் தோலை உரித்தாலும், அந்த விலங்கின் வரை படத்தை லிஸ்டர் ஓவியமாக வரைந்து கொள்வார். அவற்றை அறுவை செய்து பார்த்து, அதன் ஒவ்வொரு பாகங்களையும் பார்த்தது பார்த்தவாறே படம் வரைந்து கொண்டு, அவற்றை அடிக்கடி ஆராய்ச்சி செய்வார்.

கிறித்துவ நெறிப்படி, பிற உயிர்களின் உடலை அறுப்பதும், ஆய்வதும் அக்காலத்தில் பாவச் செயலாகக் கருதப்பட்டது.

இயற்கைக்கு மாறுபட்டது இச்செயல் எனவும் நம்பினார்கள் லிஸ்டர் குடும்பத்தினர்கள்.

ஆனால், லிஸ்டரின் தந்தையார் மகனுடைய ஆராய்ச்சிக்கு மறுப்பேதும் கூறாதது மட்டுமன்று, அதற்கு ஊக்கமும் ஆக்கமும் காட்டி வந்தார்.

ஜோசப் லிஸ்டர் தனது 18-வது வயதில், இலண்டனில் உள்ள யூனிவர்சிட்டி கல்லூரியில் சேர்ந்து, மருத்துவத் துறைக்கு உள்ள பாட போதனைகளை நன்கு அறிய, அதற்குரிய மொழிப் பிரிவு என்னவோ, அவற்றை விரும்பி எடுத்துப் படித்தார் - தேர்ச்சிப் பெற்றார். பிறகே மருத்துவக் கல்லூரியின் படிப்பில் சேர்ந்து படித்தார்.

மருத்துவக் கல்வியை ஐயம் திரிபறக் கற்ற லிஸ்டர், கல்லூரிப் பாடங்களையும் மீறி, அதற்கான சம்பந்தப்பட்ட, வேறு சில நூற்களையும் தேர்ந்தெடுத்துப் படித்தார்.

திருவள்ளுவர் பெருமானது பொய்யாமொழிக்கு ஏற்றவாறு, எந்தெந்த நூற்களைப் படித்தாலும், “எப்பொருள் எத்தன்மைத்து