பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

75மருத்துவ மனைகளை அதற்கேற்றவாறு மாற்றி அமைத்தார். நோய் கண்டவர்கள் சிறிது அளவு மருந்து உண்டாலே போதும் என்ற மனநிறைவை உருவாக்கியது மட்டுமன்று வந்த நோயும் வந்த வழி தெரியாமல் ஒட வைக்கும் மருத்துவத்தையும் ஆஸ்லர் கையாண்டார்.

அதனால் வருகின்ற நோயை விரைவாகக் குணப்படுத்தும் ஆஸ்லர் மருத்துவ நிர்வாகத்தைக் கண்ட பொதுமக்கள், பெரிதும் ஆச்சரியப்பட்டு அவரது திட்டத்தை வரவேற்றார்கள்! வாழ்த்தினார்கள்:

எல்லாவற்றையும் விட, வில்லியம் ஆஸ்லர் மருத்துவத் துறையில் பொது மக்களுக்காகச் சாதித்திட்ட அக்கறையும், அருமையும் என்ன தெரியுமா?

நோயாளர்களுக்கு வந்துவிட்ட நோயை விரைவாகக் குணமாக்குவதோடு, அந்த நோய் எக் காரணத்தைக் கொண்டும் அதே நோயாளியிடம் திரும்பி வரக்கூடாது என்ற திட்டத்தோடு தனது மருத்துவ முறையை ஆஸ்லர் இயக்கினார்.

இந்தத் திட்டத்தின் நுட்பத்தையும், மக்கள் சேவையின் மாண்பையும் கண்ட, மருத்துவத் துறையின் மற்ற டாக்டர்கள் எல்லாம் - வில்லியம் ஆஸ்லரை வாயாரா, மனமார, வாழ்த்தி மரியாதை காட்டினார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

வில்லியம் ஆஸ்லரின் பொது மக்களது மருத்துவ சேவை களை அமெரிக்கக் கண்டம் மட்டுமா வரவேற்றது? வாழ்த்தியது? உலகமே அவரது அறிவுக்குத் தலை வணங்கி வரவேற்றது.

எனவே, ஆஸ்லரின் உலகப் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பார்த்த இங்கிலாந்து நாடு, அவரது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது.

இலண்டன் மாநகரிஸ் அமைந்துள்ள “ஃபெல்லோ ஆஃப் தி ராயல் காலேஜ் பிஷிசியென்ஸ்” என்ற நிறுவனம் உலகத்திலே புகழ் பெற்றதாகும்.