பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மர இனப் பெயர்கள்

لن

சாந்தி: ஒமம். இது "உடல் வெப்பத்தைச் சாந்தி செய்து நன்னிலையில் வைப்பதால் இப்பெயர்த்து. பயன்.”

சிங்கப் பெருமான்: இரணியனைக் கொல்ல நரசிங்க வடிவெடுத்ததால் திருமாலுக்கு இப்பெயர் உண்டாயிற்று. துளசி திருமாலுக்கு உகந்த தாதலின், திருமாலுக்கு உரிய இந்தப் பெயர் பெற்றது. சார்பு.

சேவகன்: இது பேய் வெங்காயம். சேவகன்போல் பயன்படுவதால் இப்பெயர்த்தாயிற்று போலும். ஒப்புமை.

தருவிராசன்: தரு இராசன் = மரங்களின்வேந்தன். பனைக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, மக்கள் முயற்சி மிகவும் தேவைப்படாமல் தானே வளர்வதாலும், தன் எல்லா உறுப்புகளாலும் பலவகைப் பயன் தருவ தாலும், மரமன்னன் ஆயிற்றுப் போலும். தலைமை. பல வகைப் பயன்களைத் தருவதில் இது மன்னனா யிருத்தலின் தருஇராசன் (தருகின்ற இராசன்) எனப் பெயர்பெற்றது எனவுங் கூறலாமோ?

தவளம்: தவளம் என்பதற்கு வெண்மை என்னும் பொருளுண்டு. வெண்மிளகு வெள்ளையா யிருப்பதால் பண்பாகு பெயராய் இப்பெயர் பெற்றது. நிறம்-வடிவம்.

தனுவிருக்கம்: இது ஆச்சாமரம். இதற்கு மராமரம் என்ற பெயரும் உண்டு. தனு=வில்; விருக்கம்=மரம். இராமன் தனது ஆற்றலைச் சுக்கிரீவன் நம்புவதற்காகத் தனது வில்லிலிருந்து அம்பு தொடுத்து ஏழு மரா (ஆச்சா) மரங்களைத் துளைத்துக் காட்டினான் என்பது வரலாறு. வில்லால் அம்பு தொடுத்துத் துளைக்கப்பட்ட மர மாதலின், இது தனு விருக்கம் எனப்பட்டது. சார்பு.