பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 143

கனலைத் தொட்டது போல், தொட்ட விரலை வேகச் செய்யும் பால் உடைமையால் இம்மரம் இப்பெயர்த்து.

பண்பு.

காமன் ரதி = இப் பெயர் கருநிறங் காரணமாகக் கருந் துளசியைக் குறிக்கும். காமன் = மன்மதன் ; ரதி = காமனின் மனைவி. முருகனுக்கும் காமனுக்கும் வேள் என்னும் பெயருண்டு. முருகன் நிறம் செம்மையாதலின் அவன் செவ்வேள் எனப்படுகிறான். காமன் நிறம் கருமை

யாதலின் இவன் கருவேள் எனப்படுகிறான்.

காய் தெரியான் கருஞ்செம்பை மரம் இது. இதன் காய் தெரியாதாம்; ஆதலின் இப்பெயர்த்து. உடல்கூறு.

கோமூத்திரிகை: ஒருவகைக் கொடி இது. கோ = பசு, மூத்திரிகை=மூத்திரத் தோற்றம். பசு நடந்துகொண்டே மூத்திரம் பெய்யும்போது, அம் மூத்திரம் தரையில் மாறி மாறி வளைந்து காணப்படும். இந்தக் கொடியும் அவ்வாறு வளைந்து வளைந்து காணப்படுவதால் இப்பெயர் பெற்றது.

சுவர் தாங்கி மலைக்காளான் என்னும் பெரிய காளான் வகை இது. மழைக் காலத்தில், ஈரப்பசையுள்ள சுவர் ஒரம் இது முளைத்திருக்கும். பார்ப்பதற்குச் சுவரைத் தாங்கிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுவதால், வேடிக்கை யாக இது சுவர் தாங்கி எனப்பட்டது. வறுமை காரணமாக நீண்ட நாள் சமையலையே மிகவும் மறந்துவிட்ட அடுப்பிற் குள்ளும் காளான் பூத்ததாக வறுமை மிகுதியைக் கற்பனை செய்து காட்டுகின்ற

" ஆடு நளிைமறந்த கோடுயர் அடுப்பில்

ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவா ' (164 - 1, 2)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதி ஈண்டு எண்ணத் தக்கது. (ஆடு = சமையல். ஆம்பி-காளான்).