பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மர இனப் பெயர்கள்

வள்ளல் வெண்புகழ் திரண்ட

வளங்கெழு கைலைக் குன்று ”

(கைலாச கதி: 4 - 2, 3)

கடுக்கை = கொன்றை; கடுக்கை வேய்ந்த வள்ளல் = சிவபெருமான். அவரது வெண்புகழ்-வெண்மையான புகழ் திரண்டு கைலை மலையாயிற்றாம். எனவே, புகழ் வெண்மையானது; வெள்ளைப் பூக்களை உடைய வெள்

ளெருக்கு கற்பனையாகப் புகழ் மங்கை எனப்பட்டது. நிறம்.

புகழ் மரம்: அத்திமரம் இது. அத்தி என்பதற்கு யானை என்னும் பொருள் உண்டு. பெரியதும், தெய்வத்தன்மை உடையதும் விநாயகரின் தோற்றம் உடையதுமாகிய யானையின் பெயரைப் பெற்றிருப்பதால் அத்தி மரத்திற்குப் புகழ் உண்டு எனலாம். மற்றுமொரு புகழ் - முருகனுக்கு மனைவியாகிய தேவயானைக்கும் அத்தி என்னும் பெயர் உண்டு. இதனை, அருணகிரியாரின் திருப்புகழில் உள்ள

" முத்தைத் தருபத்தித் திருநகை அத்திக்கு இறை ' என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். முத்தையொத்த வரிசையான அழகிய பற்களையுடைய அத்தி தேவயானை. இங்கே அத்தி தேவயானையைக் குறிக்கிறது. எனவே, தெய்வப் பெயரைத் தான் பெற்றுள்ள அத்தி மரம் புகழ் உடைய மரமல்லவா? இத்தகைய சொல்விளையாட்டால், அத்திமரம் புகழ்மரம் என்னும் பெயர் பெற்றது.

அசோக வனம் என்பதிலிருந்து புகழ்மரம் என்பது வரையும் உள்ள பெயர்கள் சா. சி. பி. அகர முதலியில் உள்ளவையாகும்.

இலட்சுமிக் கொடி (சி.வை.அ.): தாலிக் கொடி என்னும்

கொடிவகை இது. தாலி பெண்கட்கு மங்கலமான-இலட்சுமி கரமான பொருளாகக் கருதப்படுகிறது. எனவே, தாலிக்