பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 165

அத்திக்கால் சுவடு=ஆனையடிப் பூண்டு (அத்தி=

ஆனை) (சா.) ஆனைக்கால் மூலி=ஆனையடிப் பச்சிலை (சா.) ஆனையடி, ஆனைச்சுவடு = ஆனைச் செவியடி (சா.) ஆனைக்கோடன் புடலை =ஒரு கசப்புப் புடலை

(கோடன்=கொம்பன்) (சா.)

குதிரை

குதிரைக் குளம்படிக் கொடி = தும்பா மாலினிக் கொடி (சி)

குதிரைக் குளம்படி யிலை = நில வேம்பு (மூ) குதிரைக் குளம்படிச் செடி = சாமரிகச் செடி (சி) குதிரை வாலித் தட்டை = பரி வாலித் தட்டை (சி) குதிரை வாலி அரிசி = பரித்தார அரிசி (சி) குதிரை வாலிப் பூண்டு = மவு வாலிப் பூண்டு (சி) குதிரைச் செவிப்பூடு = அசுவகர்ணம்-ஒரு பூடு -(சா) குதிரைச் செவிக் கள்ளி = நாணுகக் கள்ளி இலை (சி)

கழுதை

கழுதைக் குளம்படி = வட்டக் குளம்படிக் கொடி (சி)

முயல்

முயல் செவிக் கள்ளி = தெற்றவச் செடி (சி)

புலி

புலி நகக் கொன்றை = மஞ்சள் கொன்றை (சி) புலி நகப் பூண்டு = புலி ராகிப் பூண்டு (சி)

எலி

எலிச் செவிக் கீரை = நிலக் கூந்தல் கீரை (சி) எலிச் செவிப் பூடு அத்தி கோவிகப் பூண்டு (சா)