பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 33

கண்வலியைப் போக்குவதால், நந்தியாவட்டை, கண்வலி போக்கி’ எனப்பட்டது. பயன்.

கதலிதனம்

கதலி= வாழை. தனம் (முலை) போல, வாழைக்குலைப் பூ இருப்பதால், கதலிதனம் எனப்பட்டது. வடிவம்.

கதிரவன்

கதிரவன் = ஞாயிறு. எருக்கு வெப்பம் தரும் பொருள் ஆதலால் கதிரவன் எனப்பட்டது. ஞாயிறு என்னும் பொரு ளுடைய அருக்கன் என்னும் பெயரும் எருக்குக்கு உண்டு.

“மன்னனையுங் கையெடுக்க வைத்தெயிற்றி னோயகற்றி

உன்னு பிணிப்பணியை ஒட்டுதலால் - சொன்னேன் எருக்கெனவே பூமி யினிலே விளங்கும் அருக்கம் அருக்கன் எனலாம்' -

என்பது தேரையர் வெண்பாப் பாடல்.

கந்தகுடம்

- ஆப்பிள் பழம் குடம் போன்றிருப்பதால் இப்பெயர்

வந்தது. வடிவம்.

கபமகற்றி

பாவட்டைச்செடி ஐயத்தைப் (கபத்தைப்) போக்கு

மாதலின் கபமகற்றி எனப்பட்டது. பயன்.

கபவாதநாசனி = கபவாதத்தைப் போக்கும் அரத்தைக்

குரியது இப்பெயர். சிற்றரத்தையைக் குடும்ப மருத்துவ

மாகப் பெண்கள் பயன்படுத்துவதைக் காணலாம். பயன்.

கபவாதம் அறியான் = கொடுக்காய்ப்புளி கபவாதத்

தைப் போக்குமாம். பயன்.