பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 35

படாது - என்று சொல்ல முடியாதபடி எல்லா நோய்கட் கும் பயன்படும்’ என்று பாடலை முடித்துள்ளார்.

“ ஈதுக்கு உதவும் ஈதுக்கு உதவாது

எனும் விதியிலை நவசுறு குணமுனவே ”

என்பது சுக்கு பற்றிய தேரையர் குண பாடப் பாடல் ஒன்றின் இறுதிப் பகுதியாகும். சுக்காகிய இஞ்சி, செடியின் அடியில் உள்ள வேர்க்கொம்புக் கிழங்கு, ஆதலின், சுக்குக்கு வேர்க்கொம்பு’ என்னும் பெயரும் உண்டு. மற்ற கிழங்கு கள் போல் இன்றி, மானின் கொம்புபோல் பல பிரிவினதாகி யிருப்பதால் கொம்பு’ எனப்பட்டது. இவ் வேர்க்கொம்பு என்னும் பெயரை,

  • நன்றான வேர்க்கொம்பும் நற்சாரடை வேரும்

ஒன்றாய்க் கியாழமிட்டு உண்டுவிடில் - அன்றேதான் ஒடுமே மந்தம் ஒளியாமல் நாடகன்று காடுதனில் போகிவிடுங் காண் ”

என்னும் தேரையர் வெண்பாப் பாடலால் அறியலாம். எனவே, இவ்வளவு இன்றியமையாத சுக்கு, கையில் இருக்க வேண்டிய படைக்கலம் போன்றது என்னும் பொருளில் 'கர பத்திரம் என்னும் பெயர் பெற்றிருப்பது பொருத்தமே. ஒப்புமை.

இதற்கு இன்னொரு வகையான பெயர்க் காரணமும் கூறலாம். கரம் = கை; பத்திரம்= இலை- (இலையுடைய பூடு). முழுச்சுக்கு, கைவிரல்கள் நீட்டிக் கொண்டிருப்பது போல் தோற்றமளிப்பதால், கை(கரம்) போன்ற வடிவ முடைய பத்திரம் என்னும் பொருளில் இப்பெயர்த் தாயிற்று என்றும் கூறலாமே! வடிவம் - ஒப்புமை.

கரித்தோல்

அத்தி என்பதற்கு யானை யென்னும் ஒரு பொருள் உண்டு. கரி என்பதற்கும் யானை எனும் பொருளுண்டு.