பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மர இனப் பெயர்கள்

தோல் = மேற்பகுதி. எனவே, சொல் விளையாட்டாக, அத்திமரப்பட்டை கரித்தோல் எனப்பட்டது.

கரிய மணி - கரிய மணிபோன்றிருப்பதால் கருஞ்சீரகம் இப்பெயர் பெற்றது. வடிவம்.

கருநிற மலச்சி = சிவந்த குண்டு (குன்றி)மணி, கரிய நிற மூக்கு உடைமையால் கருநிற மலச்சி எனப்பட்டது. வடிவம் - நிறம்.

கரு கேத்திரத் தார் மாலை

நேத்திரம் என்பதற்கு வேர் என்னும் பொருளும் உண்டு. பனைவேர் கருமையாயிருக்கும்; பனம்பூ மாலை சேரர்க்கு உண்டு. மாலையாகப் பயன்படுவதும் கரிய வேரை உடையதுமாகிய பனை, கருநேத்திரத் தார் மாலை எனப் பட்டது. நிறம் - பயன்.

கர்ப்ப பாதகம் = செம் முருங்கையால் கருச்சிதைவு உண்டாகுமாதலின் இப்பெயர் வந்தது. பயன்.

கர்ப்பாக்கினி: கர்ப்ப - அக்கினி = கர்ப்பாக்கினி, பப்பாளிப்பழம் உண்டால் கரு உண்டாகாதாம் - வயிற்றில் உண்டான கருவும் சிதைந்துவிடுமாம். பிள்ளைப்பேற்றை விரும்பாதவர் பப்பாளிப்பழம் உண்பதைப் பார்த்திருக்க லாம். கர்ப்பத்தை அக்கினிபோல் எரித்துச் சிதைத்து விடுவதால், பப்பாளி கர்ப்பாக்கினி' எனப்பட்டது. பயன். கனிந்த பழம்: வாழை கனிந்தால் சுவை மிகுதியாதலின் வாழைப்பழத்திற்கு இப்பெயராயிற்று. பண்பு.

காசிக்கிருஷ்ணன்: கிருஷ்ணன் = கறுப்பு. கருஞ்சீரகம் இப்பெயர் பெற்றது. நிறம்.

காட்டெரி = பாலைவனக் காட்டில் எரியக் கூடிய கள்ளி 'காட்டெரி எனப்பட்டது. சார்பு. ஈண்டு,