பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 59

உடம்பையும் தூய்மை செய்யும். பெரும்பாலான நோய் கட்கு மலச் சிக்கல் காரணம் என்பது நாட்டு மருத்துவ முறை. எனவே, நேர் வாளம் பலவகை நோவுகளையும் போக்குவதால் நோவு போக்கி’ எனப்பட்டது. பயன். பாடல் சான்று :

தேரன் வெண்பா - வாளம். ' எந்த வியாதி இனங்களையும் சாடிமல

பந்த வினையைப் பரிபரித்து - வந்த வெப்பை பாபியென மாட்டுதலால் பாடான வெம்மையினும் சோபிமகா சோபியென்று சொல்” .

அகத்தியர் குணபாடம்:

ஒதில் உதரத் துறுமலம் பன்னோய் விலகும்; பேதி மருந்திற் பெரிதாகும் - வாதமறும்; கூர் வாளை ஒத்தவிழிக் கொம்பனையே! பண்டிதர் சொல் நேர்வாளக் கொட்டைதனை நீ' -

மேலுள்ள பாடல்களில் உள்ள எந்த வியாதி இனங்களை யும் சாடி', 'பன்னோய் (பலநோய்) விலகும்' - என்னும் பகுதிகளால், நேர்வாளம் நோவு போக்கி என்னும் பெய ருக்கு ஏற்றது என்பது புலனாகும்.

பச்சைபோல் வெள்ளை யாவான்: தாளிப் பனை

முதலில் பச்சையாக இருந்து பிறகு வெள்ளையாக மாறுவ தால் இப்பெயர் பெற்றது. வடிவம்.

பஞ்சம் தாங்கி, கேழ்வரகு விலை மலிவு. பஞ்சம் இல்லாக் காலத்திலே கூட ஏழைகள் கேழ்வரகு உணவு கொள்வர். பஞ்ச காலத்திலோ சொல்லவே வேண்டிய தில்லை. வேறு தானியம் கிடைக்காதவர் யாவரும்