பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 89

வீட்டில் நெருப்பு எனப்பட்டது. வீட்டுத்தீ’ என்றும் இது சொல்லப்படும்.

வீரச் செல்வி: இது சத்தி சாரணை என்னும் பூடு. சத்தி என்பதற்கு, வீர ஆற்றலுடைய சக்தியாகிய தெய்வம் என்ற பொருள் உண்டு. தேவி சத்தியை வீரச் செல்வி என்றும் கூறுவர். எனவே, சத்தி சாரணை, சொல் விளை யாட்டாக வீரச் செல்வி எனப்பட்டது.

வீரிய தேசு = இது வல்லாரை, வீரியம் = ஒளி, வலிமை; தேசு = ஒளி (பிரகாசம்). வல்லாரை உடலைத் தேற்றி வலிமையும் ஒளியும் உடையதாகச் செய்யுமாதலின் வீரிய தேசு எனப்பட்டது. பயன். இதற்குப் பொருட் பண்பு நூலில், 'உடல் தேற்றி, உரம் (பலம்) ஆக்கி’ என்னும் செய்கைகள் உரியனவாகச் சொல்லப்பட்டுள்ளது.

வெகு காமி. தொழு கண்ணிச் செடி. இது மிக்க காம உணர் வைத் தூண்டுமாம்.

வெண்ணிர்த் தெளிவு : சேங்கொட்டை கலங்கல் நீரை வெண்ணிராக-தெளிந்த நீராகச் செய்யப் பயன்படுதலின் வெண்ணிர்த் தெளிவு எனப்பட்டது. பயன்.

வேகி: இது மிளகாய். அளவோடு மிளகாய் உண்ணின், உடம்புக்கு உற்சாகம் - விருவிருப்பு - வேகம் கொடுக்கு மாதலின் மிளகாய் வேகி எனப்பட்டது. அ.கு.பா. பாடல் ஒன்றில் உள்ள 'உந்து மிளகாய்ப் பழத்தால் ஒது’ என்னும் அடியில் உள்ள 'உந்து” என்பது, வேகத்தை விருவிருப்பை உந்தும்-செலுத்தும் என்னும் பொருளில் உள்ளமை காண்க. வேசி: மிளகுத் தக்காளி தோற்றத்தில் வேசி (பரத்தை) போல் கவர்ச்சியாயிருப்பதால் வேசி எனப்பட்டது. ஒப்புமை. வேசி நங்கை = மிளகாயும் செடியில் உள்ளபோது வேசிபோல் கவர்ச்சியா யிருப்பதால் வேசி நங்கை எனப்

பட்டது ஒப்புமை.