பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மர இனப் என்பன வைத்திய மலை அகராதியிலும், ஊருடை முதவி அமுத சாகர நூலிலும், ஊருடை மரம் - கிழவி தானிக மரம் - தவசி முருங்கைச் செடி - மூலகப மரம் - முகக் கந்தமரம் என்பன சித்த வைத்திய அகராதியிலும், காம விர்த்தினி என்பது கண்ணுசாமி பிள்ளையின் பதார்த்த குண அரும்பொருள் விளக்க நூலிலும், ஊருடை முதலியார்சிக்கிர பத்திரம் என்பன ஜூபிலி தமிழ்ப் பேரகராதியிலும், பிரம்ம விருட்சம் என்பது தமிழ்க் கலைக் களஞ்சியத்திலும், மற்றவை சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் - ஆங்கில அகர முதலியிலும் இடம் பெற்றுள்ளன. 10. வடமொழிப் பெயர்கள்: வடமொழியில், மரிகம், பாரித்திரம், பீரோத்தம், சிக்குரு, சோபாஞ்சனம், கிரஞ்சனம் முதலிய பெயர்கள் முருங்கைக்குத் தரப்பட்டுள்ளன. இவற்றின் பெயர்க் காரணங்களை வடமொழியாளரிடம் கேட்டறிய வேண்டும். 9. இங்கேயும் ஒரு கைகேயி (இது கரிசலாங் கண்ணியைப் பற்றியது). 1. ஒப்புமையால் பெற்ற பெயர்: இராமனின் தாயாகிய கோசலைக்குக் களத்தியாவாள். ஆடவர் ஒருவரை மணந்து கொண்ட சம நிலையினராகிய பெண்டிர் இருவர் சக களத்தி எனப்படுவர். உடன்பிறந்தார் என்பதுபோல், சக களத்தியரை, உடன் மனைவியானார் என்று கூறலாம். கைகேயி சக மனந்தார் - உடன் பேச்சு வழக்கில் இப்பெயரைச் சக்காளத்தி எனக் கொச்சையாக வழங்குவர். இவ்வடமொழிப் பெயருக்குத் தமிழ்ப் பெயர் உண்டு. பேச்சு வழக்கில் ஒத்தா-ஒப்படியா' பெயர்வைப்புக் கலை 147 என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதன் திருத்தமான வடிவம் ஒத்தாள் - ஒர் படியாள் என்பதாகும். ஒத்த ஒரு படித்தான தகுதி யுடையவள் என்னும் பொருளில் இந்த ஆட்சி உள்ளது. மாற்றவள். மாற்றாள் என்பனவும் இப்பொருளினவே. 1-1. கைகேயி அறிமுகம்: சக களத்திகள் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை கொண்டு போரிடுவ துண்டு. இது "சக்காளத்திப் போராட்டம்' எனப்படுகிறது. சக களத்தியர் அல்லாத பெண்டிர் இருவர் ஒருவரோடு ஒருவர் வாய்ச் சண்டை போடும்போது, அடி என் மாமியாரே - அடி என் மருமகளே - அடி என் நாத்தனாரே - அடி என் ஒரகத்தி - என்று திட்டிக் கொள்ளாமல், அடி என் சக்காளத்தி என்று திட்டிக் கொள்வதிலிருந்து, ஒத்தாளும் ஒர்படியாளுமாகிய சக களத்திகளின் நிலைமை புரியும். இராமாயணக் கதை மாந்தருள், தசரதனின் முதல் மனைவியாகிய கோசலைக்கு. இரண்டாம் மனைவியாகிய கைகேயி சக களத்தியாவாள் என்பதைக் குறிப்பிடவே இவ்வளவு தொலைவு பயனஞ் செய்ய நேர்ந்தது. கைகேயி இங்கே வரக் காரணம் என்ன? 1-2. சக களத்திப் போராட்டம்: இராமன் முடிசூடின் அவன் தாய் கோசலையின் கை ஓங்கிவிடும்; கோசலை பார்த்துக் கொடுப்பது தான் கைகேயிக்கு உரியதாகும். இரவலர்க்கு ஒன்று சயவேண்டு மெனினும் கைகேயி கோசலையைக் கேட்டே தரவேண்டி வரும். உதவி வேண்டிக் கைகேயியின் தாய் வீட்டார் வசின், கோசலையின் செல்வத்தையே காண்பர் அவர். கைகேஜ்ன் துணையாகிய கூனி, இனி, கோசலையின் தாதிகர்க்கு அடிமை செய்ய நேரும். அதனால் இராமனைக் காடு ரகச் செய்து பரதனை நாடாளச் செய்யவேண்டும் . எனக் கூனி