பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155–

மறவர் சீமை

16. இறுதித் தாக்குதல்

இராமநாதபுரம் சீமை, சிவகெங்கைச் சீமை ஆகிய இரு மறவர் சீமைகளிலும் எழுந்து பரந்துள்ள விடுதலைஇயக்கத்தை முன்னின்று நடத்துப்பவர்களான சித்திரங்குடி சேர்வைக்காரர், மீனங்குடி முத்துக்கருப்பத் தேவர், சிவகெங்கை பிரதானிகளான சின்னமருது, பெரியமருது சேர்வைக்காரர்கள் ஒருபுறமும், கும்பெனிக் கலெக்டர், லூவிங்டன், கும்பெனித் தளபதி அக்கினியூ இன்னொரு புறமாகத் தங்களது அணிகளை ஆயத்தப்படுத்துவதில் முனைந்து இருந்தனர்.

திருச்சுழி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக இராமநாதபுரம் கோட்டைக்கு வருவதற்குள் இராமநாதபுரம்,

சிவகெங்கைக் கிளர்ச்சிக்காரர்கள் அக்கினியூவைப் படாத பாடுபடுத்தினர். அக்கினியூவின் பாதுகாப்பிற்காக

மதுரையிலிருந்து தளபதி கிரகாம் என்பவனது தலைமையில் வந்த கும்பெனியாரது அணியைக் கிள்ாச்சிக்காரர்கள் திருப்புவனம் அருகே வழிமறித்துத் தாக்கினர். கடுமையாக இரு தரப்பினரும் போரிட்டனர். இருதரப்பிலும் பலத்த சேதம். தளபதி கிரகாம் மயிரிழையில் உயிர் தப்பினார். அதிலும் இன்னொரு தளபதியான ஷெப்பர்டின் சமயோசித புத்தியினால், இந்த நெருக்கடி நிலையிலும்