பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–497

மாவீரன் மயிலப்பன் - - F

தொடர்ந்து பயணம் மேற்கொண்ட அக்கினியூ அணியினைத் திருப்பாச்சேத்தி கண்மாய் அருகே 8.6.1801ல் தாக்கினர்." கிளர்ச்சிக்காரர்கள் எழுபது பேர் தியாகிகளாயினர். கும்பெனியாரது உயிர்ச்சேதம் அறியத்தக்கதாக இல்லை. இவ்விதம் அக்கினியூவின் அணிக்கு வழி நெடுக எதிர்ப்பு இருந்தும் அவர்களை முறியடித்துவிட்டு அக்கினியூ இராமநாதபுரம் கோட்டைக்கு வந்து சேர்ந்தான்.

இருபது நாட்கள் இராமநாதபுரம் கோட்டையில் தங்கிய தளபதி அக்கினியூ இராமநாதபுரம் சீமையின் வடக்கு, தெற்குப் பகுதிகள் மற்றும் சிவகெங்கைச் சீமை ஆகியவைகளின் நிலமைகளை மிகவும் தெளிவாக ஆய்வு செய்தான். இது சம்பந்தமாகப் புதுக்கோட்டை தொண்டைமானையும் தொடர்புகொண்டு அவரது கருத்துக்களையும் பெற்று ஒரு முடிவிற்கு வந்தான். அக்கினியூவின் சிந்தனையில் இராமநாதபுரம் சீமையை விடச் சிவகெங்கைச் சீமை பற்றிய திட்டங்கள்தான் மேலோங்கி நின்றன. பாஞ்சாலங்குறிச்சிக்கும் இராமநாதபுரம் சீமை கிளர்ச்சியாளர்களுக்கும் பக்கதுணையாக இருப்பவர்கள் சிவகெங்கைப் பிரதானிகள் தானே. பாஞ் ைச பிடித்தாகிவிட்டது. எஞ்சியுள்ள சிவகெங்கை, இராமநாதபுரம் சீமைகளில் கிளர்ச்சிக்கு உயிர்நாடியாக விளங்கும் சிவகெங்கைச் சீமையைப் பிடித்து விட்டால், இராமநாதபுரம் சீமை கிளர்ச்சியாளர்களை அழித்து விடுவது எளிது.

இதுதான் அக்கினியூவின் முடிவு. ஆனால், இதனை அவ்வளவு எளிதில் நிறைவேற்றிட முடியுமா? மக்களது மனங்களில் மிகுந்த செல்வாக்குப் பெற்று இருக்கும் மருது சேர்வைக்காரர்களை வளைத்துப் பிடிக்கத் திட்டம் என்ன? பாஞ்சாலங்குறிச்சிப் போரில் கும்பெனியார் கற்றுக் கொண்ட படிப்பினை கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களை எளிதில் எடைபோட்டுவிடக்கூடாது என்பதுதான். வீணாகப் பொருள் இழப்புடன் மக்களது உயிர் இழப்பும் மிகுதியாவதைத் தடுப்பது எப்படி? எல்லாவற்றிற்கும் தீர்க்கமான

76. Dr. K.Rajayyan - History of Madurai 1972.