பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 O ==

மறவர் சிமை

சிவகெங்கைச் சீமை பற்றிச் சென்னைக் கோட்டையில் கல்கத்தாவில் உள்ள கும்பெனியார் கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் வரையப்பட்டுள்ளது.

“இராமநாதபுரம் பாளையத்திற்கு அருகில் உள்ள சிவகெங்கை ஜமீன்தாரி பகுதிக்கு புரட்சியின் போக்குப் பரவி உள்ளது. அந்த ஜமீன்தாரின் அமைச்சர்கள் இந்த மனப்பான்மையுடன் நடந்து வருகின்றனர். நமது கும்பெனியாருக்கு எதிராக திருநெல்வேலிச் சீமையில் புரட்சியைத் துரண்டிவிட்டு, பாஞ்சாலக்குறிச்சிப் போரின் முடிவில் தறிபட்டு ஓடிவந்த அகதிகளுக்குப் புகலிடம் அளித்து, தளபதி அக்கினியூ தலைமையில் உள்ள கும்பெனி அணிகளுடன் பொருதுவதற்கு ஆயத்தம் செய்து வருகின்றனர். தளபதி அக்கினியூவின் போர் உத்திகளை நிலைகுலைய உறுதிபூண்ட ஆயுதங்தாங்கிய புரட்சிக்காரர்கள் ஆகிய இணக்கமற்ற சூழ்நிலைகள்.”

அடுத்து கும்பெனியாரின் குள்ளநரித் தந்திரங்கள் செயல்படத் துவங்கின. சிவகெங்கையை அடுத்துள்ள மேலுார் நாட்டு கள்ளர்களை அணுகினர். இவர்கள் ஏற்கனவே சிவகெங்கைப் பிரதானிகளுடன் நல்ல நேச தொடர்புகளை வைத்து இருந்தனர். குறிப்பாக அந்த இனத்தவரில் சிறப்பான கிடாரிப்பட்டி, குனியமுத்துர் அம்பலக்காரர்கள் கள்ளர் இன மக்கள் தலைவர்கள் அடிக்கடி சிவகெங்கை வந்து அரசு விருந்தினர்களாக இருந்ததுடன் சிவகெங்கைப் பிரதானிகளது அன்பிற்கும் கெளரவிப்பிற்கும் உரியவராக இருந்தனர்" இவர்களது நட்பு நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி தங்களது கைக்கூலிகளாக மாற்றுவதற்கு முயன்றனர். கீழவளவு, அன்னூர் நாட்டுத் தலைவர்கள் கும்பெனித் தளபதி கரோலின் முயற்சிகளுக்கு இடந்தரவில்லை. ஆனால், மேலுர் சென்ற தளபதி இன்னிங்ஸ் என்பவன் சாம பேததான தண்டத்தைப் பயன்படுத்தி மேலுார் கள்ளர்களிடம் விசுவாசப் பிரமாணத்தைப்

80. Military Consultation's 1801. 81................. do......................