பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

- =மறவர் சீமை வேதய்யா, ராமண்ணாவும், வடுகநாத நாயக்கர் மைந்தர் திருமலை நாயக்கரும், தஞ்சாவூரில் தங்களது தன்னாட்சியை, தமது நாட்டுக்குரிய மரபுகளுக்குக் குந்தகம் ஏற்படாமல் பெறுதல் வேண்டும். அப்பொழுதுதான் அனைத்து ஏழை எளிய மக்களும் நிம்மதியடைவார்கள்.

“ஆனால், உங்களில் யாராவது இழிந்த பிறவிகளான நாய்களைப் போன்றவர்கள் பரங்கியர்களது ஆணைகளுக்குப் பணிந்து நடந்து விடுதல், அவர்களது...' வெட்டப்படும். இத்தகைய இழி குலத்தார் பரங்கியருடன் இணைந்து இந்த நாட்டை அடிமைப்படுத்தி இருப்பதை நாம் அனைவரும் அறிந்தது.

“ஆதலால், நீங்கள் பிராமணர்கள், வைசியர், செட்டியார், சூத்திரர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் மீசை வைத்துள்ள அனைத்து ஆண் மக்களும் - பொதுப்பணியிலோ, பட்டாளத்துச் சேவையிலோ அல்லது சுபேதார், ஜமேதார், நாயக், சிராங் ஆகிய பணிகளில் பரங்கியரிடம் பணியாற்றுபவர்களும், ஆயுதம் தாங்கிப் போராடும் வல்லமை வாய்ந்த அனைவரும் தங்களது ஆண்மைத் திறமையை முதன்முறையாக நிரூபித்துக் காட்டுங்கள். நீங்கள் பரங்கிகளை எங்கு கண்டாலும் அழித்து ஒழியுங்கள்.

“மாறாகத் தொடர்ந்து அதே இழி பிறப்புகளிடம் பணியாற்றினால், உங்கள் மரணத்திற்கு பின்னர் மறுமை இன்பம் கிடையாது. இந்த உண்மையை அறிந்தவன் நான். ஆதலால், இதில் நான் தீவிரமாக இருக்கிறேன். இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கழிசடைகள். அவர்களுக்கு அறுசுவை உணவுகள் கிடைக்காமல் போகட்டும். அவர்களது மனைவிகள் மாற்றானது பெண்டுகளாகப் போகட்டும். அவர்களது மக்களும் இழிபிறப்பாளர்களாகப் போகட்டும். பரங்கிகளது இரத்தக் கலப்பில்லாத அனைவரும் உடனே ஒன்றுபடுங்கள்.

86. குறிப்பிட இயலாச் சொல் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. Revenue Sundries vol 26 (16.06.1801 pp.441-70.