பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

மறவர் சீமை

நீண்ட கைத்தறித்துணி ஒன்றில் பிரதி செய்யப்பட்ட சிவகெங்கைப் பிரதானிகளின் இந்த வேண்டுகோள் நகல் ஒன்று எப்படியோ சித்திரங்குடி சேர்வைக்காரரது கையில் கிடைத்தது. இதனை முதுகளத்துர் பகுதியில் உள்ள சிக்கல், ஆப்பனுார், கடலாடி, சாயல்குடி, பெருநாழி, பரளச்சி ஆகிய ஊர்களுக்கும், கமுதிப் பகுதியில் உள்ள பேரையூர், பள்ளிமடம், மண்டலமாணிக்கம், பாப்பான்குளம், பெத்தனேந்தல் ஆகிய ஊர்களுக்கும் அனுப்பி வைத்து ஆங்காங்கு ஊர்ப் பொதுவிடத்தில் ஒருநாள் முழுவதும் தொங்கவிடப்பட்டது. அத்துடன் அந்த ஊர்மக்களில் பெரும் பகுதியினர், தற்குறியினராக இருந்ததால், எழுதிப் படிக்கத் தெரிந்த ஒருவர் அந்த ஊர் மக்களைத் திரட்டி வைத்து அவர்களுக்கு அந்த விளம்பரத்தைப் படித்துக் காண்பித்தார். அந்த விளம்பரம் இவ்விதம் எல்லா ஊர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டுப் பத்திரமாகச் சித்திரங்குடி சேர்வைக்காரரது கைக்குத் திரும்பி வந்தது.

இந்த வேண்டுகோள் புதுமையானதாக இருந்தது. அத்துடன் அந்தப்பகுதி மக்கள், வெஞ்சினங்கொண்டு கும்பெனியாரை அழிப்பதற்கு வீரசபதம் மேற்கொள்ளவும்