பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

மாவீரன் மயிலப்பன்- -

சிந்தித்ததை செயல்பட்டதை மறந்து தன்னைப்பற்றி மட்டும் ஒரு அவசர முடிவிற்கு வர அவரது உள்ளுணர்வு உணர்த்தியது. ஏனெனில் அவரைப் பிடித்துக் கொடுக்க எட்டப்பன், தொண்டைமான் போன்ற கும்பெனியாரது அடிவருடிகள், அவரது நிழலைப்போல பின் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர் அல்லவா? ஆம்! அடுதது என்ன செய்ய வேண்டும்? இந்த வினாவிற்கு விடை காண வேண்டும். இது நான் யோசித்து செய்யும் முடிவு சரியானதாக இருக்குமா? குழப்பமான எனது உள்ளத்தில் தெளிவான விடை கிடைக்குமா? வேறு நண்பர்கள் யாரிடமாவது கலந்து யோசித்தால் பயனுள்ளதாக இருக்குமே!

வங்க மாநில நிர்வாகி சுராஜ் - உத்தெளலாவைக் காட்டிக் கொடுத்த மீர்காசிம், மகத்தான மைசூர் மன்னர் திப்புசுல்த்தானைக் காட்டிக் கொடுத்த பூர்ணய்யா, மதுரை நாயகமாக விளங்கிய மாவீரன் கம்மந்தான் கான்சாகிபுவைப் பிடித்துக கொடுத்து திவான் சீனிவாசராவ், பாஞ்சைப் பாளையக்காரர் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை தொண்டைமான் என நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட நல்லோர்கள் அனைவரையும் அழித்து ஒழிக்க உதவிய அதே துரோகிகளின் வாரிசுகள் மயிலப்பன் சேர்வைக்காரரையும் கும்பெனியாரிடம் பிடித்துக் கொடுக்க பெரும் பேராசையுடன் முயன்று வந்தனர்.

அவரது தலைக்கு கும்பெனி தளபதி அக்கினியூ அறிவித்து இருந்த ஆயிரம் வெள்ளிப்பணங்கள் கிடைக்குமல்லவா? சேச்சே! இப்படியும் மனிதர்களா? அதிலும் தமிழகத்தில் மறவர் சீமையிலா? மானமும் வீரமும் விஞ்சிய மறவர்களது நிலை இந்த அளவிற்கு தாழ்ந்து விட்டதா?

மதுரை மண்டலத்தைக் கைப்பற்ற விரைந்து வந்த கன்னடப்படைகளை வீராவேசத்துடன் எதிர்த்து அழித்து தமிழ்நாட்டில் தன்மானத்தைக் காத்த திருமலை சேதுபதியின் வலதுகரமாக விளங்கிய மறவரது வழித்தோன்றலா இவர்கள்? மறவர் சீமையைக் கைப்பற்ற பல படையெடுப்புகளை மேற்கொண்ட தஞ்சை மராத்கிய மன்னர் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த கிழவன் ரகுநாத சேதுபதியின் சிறப்புமிகு மறவர்களது வழித்தோன்றலா இவர்கள்