பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 B.

மறவர் சீமை

ஆவணங்களில் காணப்பெறுகின்றன.

இங்ங்னம் தமிழர்களின் L IT ബ് உணர்வினுக்கும், வீரச்செயல்களுக்கும், இருப்பிடமாக தமிழக கோட்டைகளும், தமிழ் மக்களது ஆயுதங்களும் கர்ணனிடமிருந்து பறிக்கப்பட்ட கவச

குண்டலங்களைப் போல அகற்றப்பட்டதனால் மக்களது போர்க்குணமும், ஆற்றலும், நாளடைவில் மங்கி மறைவதற்கு ஏதுவாக அமைந்தன. இதனைத்தான் கும்பெனியாரும் எதிர்பார்த்திருந்தனர்.

இத்தகைய நடவடிக்கைகளைக் கும்பெனியார் மேற்கொண்டு இருந்தபோதும் உள்ளுர் மக்களைப் பற்றிய அச்சமும், பீதியும் அவர்களிடம் இருந்துகொண்டே வந்தது. இதனை குறிப்பிடும் நிகழ்ச்சி பற்றிய குறிப்புகளும், அவர்களது ஆவணங்களில் காணப்படுகின்றன. திருநெல்வேலி நெல்லையப்ப சுவாமிக்கு ஆண்டுதோறும் ஆணித்திங்களில் திருமஞ்சன விழா நடைபெறுவது நாம் அறிந்ததே. அந்த ஆண்டு நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் பக்தியுடன் கலந்து கொள்வார்கள் என்ற செய்தியை முன்கூட்டியே அறிந்த கலெக்டர் லூவிங்டன் திருநெல்வேலி இராணுவத் தளபதி ஷெப்பர்டுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்' அந்த கடிதத்தின் வாசகமாவது........

"திருநெல்வேலி நகரில் நடக்கும் விழாவிற்காக வந்து கூடுகின்ற நூற்றுக்கணக்கான மக்களை விழாவின்பொழுது, ஆங்காங்கு போதுமான சிப்பாய்களை நிறுத்தி வைத்து, அந்த மக்களது நடமாட்டத்தை கண்ணும், கருத்துமாக கண்காணித்து வருதல் வேண்டும். மற்றும் கோயில்விழா முடிந்த உடனேயே கூடியிருந்த மக்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு செய்தல் வேண்டும்". இந்த கூட்டத்தினர் கும்பெனியாரது எதிர்ப்பு உணர்வுடன் நடந்து கொண்டு கும்பெனியாரது சிப்பாய்களையும், சொத்துக்களையும் அழிப்பதில் முனைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கலெக்டர்

101. gbid (11.07.1802) p-56.