பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 மாவீரன் மயிலப்பன் =

சற்றும் மனிதாபிமானமில்லாத முறையில் அவர்களது இரத்தத்தை உறிஞ்சிப் பணமாக மாற்றி தங்களது கருவூலங்களை நிறைத்தனர்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி பாளையக்காரர்களையும், மன்னர்களையும் தங்களது வெடிமருந்து ஆயுதங்களின் வலிமையால் ஈவு இரக்கமின்றி கொடுமையான முறையில் அழித்து ஒழித்தனர். "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்ற தொன்மையான முடியாட்சி முறையை ஒழித்து ஏகாதிபத்திய அடிமைச் சங்கிலியால் இணைத்தனர்.

வெள்ளைப் பரங்கியரது ஏகாதிபத்தியக் கனவைக் குலைக்க நடந்த புதிய பாரதப்போரின் கடைசி அங்கம்தான் நடந்து முடிந்த காளையார் கோவில் கோட்டைப்போர். இந்த நாட்டின் மரபுவழியிலான போர் முறைகளுக்கு வெள்ளைப் பரங்கிகள் கொடுத்த கடைசி மரண அடியாக அந்தப் போரின் முடிவு அமைந்தது. வாள், வளரி, வேல் ஆகியவைகளையே கையாண்டு தமிழர்களது ஆண்மையும் வீரமும் அக்கினி மழை பொழிந்த கும்பெனியாரது பேய்வாய்ப் பீரங்கிகளுக்கு முன்னர் பொல பொலவென மங்கி, மழுங்கி மறைந்து விட்டன.

ஏற்கனவே நடந்த போரில் . சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவர் வீரமரணமுற்று இந்திய விடுதலைப் போரின் முதல் தியாகியானார். அடுத்து வெள்ளையரை எதிர்த்த இராமநாதபுரம் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி சிறைப் பிடிக்கப்பட்டு திருச்சிக் கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார். அவர்களது பிரதிநிதிகளாக இந்தப் பாரதப் போரை நடத்திய சிவகங்கை மருதுபாண்டியர்களும் மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரும் சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரும் தோல்வியைத் தழுவினர். ஓடுகின்ற முயல்களைத் துரத்துகின்ற ஒநாய் போல இந்தத் தலைவர்களை கும்பெனித் தளபதி அக்கினியூ துரத்திப் பிடிக்க இரவும் பகலுமாக அவனது கூலிகளையும் அடி