பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்

1 155 5

22. பிரியா விடை

தூத்துக்குடி துறைமுகம் கி.பி.1802ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி முற்பகல் நேரம் கடல் அலைகள் கதிரவனின் வெம்மைக்குத் தாளாமல் அப்படியும் இப்படியுமாக அலைந்து கொண்டிருந்தன. துறைமுகத்தின் சிறுசிறு படகுகளுக்கு அப்பால், கரையிலிருந்து ஒரு கல் தொலைவில் ஒரு பெரிய பாய் மரக்கப்பல் நங்கூரமிடப்பட்டு

நின்று கொண்டிருந்தது.

அந்தக் கப்பலுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகப் பலவிதமான தலைச்சுமைகளுடன் கூலியாட்கள் கரையில் நின்று கொண்டிருந்த படகிற்கு சென்று கொண்டிருந்தனர். பின்னர் அந்தச் சுமைகள் அந்தப் பெரிய பாய்மரக்கப்பலுககு எடுததுச்

செல்லப்பட்டன. தேவையான மாவு, அரிசி,

பருப்பு, உப்பு மற்றும் குடிநீர் ஆகியவைகள் தான் அந்தச் சுமைகள். அன்று புறப்படுவதாக இருந்த பயணிகளுக்குத் தேவையான பொருள்களாகத்தான் அவை இருக்க வேண்டும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வார்கள்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் ஒரு சிறு கூட்டமாக மக்கள் அங்கு திரண்டு வந்து கப்பலை வேடிக்கை