பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= -

விவசாயி செலுத்த வேண்டிய தீர்வை எவ்வளவு தெரியுமா? 71,629/ஸ்டார் பக்கோடா பணம் தான்ய விளைச்சல் மதிப்பீட்டில் ஒன்றரை மடங்கு கூடுதலான தொகை கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய தீர்வை உழுதவன் செலவு கணக்குப் பார்ப்பதற்கு முன்னமேயே விளைச்சல் அனைத்தையும் கும்பெனி கைக்கூலிகள் கொள்ளை கொண்டனர். பாக்கி வரித்தொகைக்குக் குடிகளது உழவு மாடுகள், தட்டுமுட்டுச் சாமான்களையும் பறித்துக் கொண்டனர். எந்த நாட்டிலும் நடக்காதது இந்தக் கொடுமை. முதுகளத்தூர் பகுதிகளில் பசிக் கொடுமையால் காய்ந்த சாவிப்பயிர் போல மக்கள் மடிந்து செத்தனர். எஞ்சியவர்கள் வடக்கே பஞ்சம் பிழைக்க உயிரைப் பிடித்துக் கொண்டு தஞ்சை, மதுரைப்பகுதிக்கு ஓடினர்."

மேலும், கமுதி, அபிராமம், மண்டல மாணிக்கம், பாளாச்சி, பரமக்குடி, எமனேஸ்வரம் ஆகிய ஊர்களில் கணிசமான மக்கள் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு இருந்ததும், கும்பெனிக் கொள்ளையர்களின் கண்களில் பட்டது. நெசவான ஒவ்வொரு, மடித்துணிக்கும் தீர்வை செலுத்த வேண்டும் எனக் கும்பெனியார் நெசவாளர்களைக் கட்டாடப்படுத்தினர். மேலும், அவர்கள் நெசவு செய் அனைத்துத் துணிகளது மடிகளுக்குரிய சுங்கம் செலுத்தி பூ.றொர்களா என்பதைச் சரிபாக்க அடிக்கடி அவர்களது குடியி குப்பில் நுழைந்து அடாவடியாக சோதனைகள் நடத்தி அவர்களைத் துன்புறுத்தி வந்தனர். நெசவாளர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த இத்தகைய இடர்ப்பாடுகளால், நெசவு உற்பத்தி பாதிக்கப்பட்டவுடன், கைத்தறித்துணிகள் விற்பனையையும் பாதித்தது. வறட்சி தொடர்ந்ததால் மக்கள் பஞ்சத்திலும், பசியிலும் நலிந்து அழிந்தனர்.

தங்களது கையில் உள்ள பணத்தைக் கொண்டு தானியங்களை வாங்க விரும்பியவர்களுக்குச் சந்தையில் கூட தானியங்கள் கிடைக்கவில்லை. மதுரை, தஞ்சை போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் வாங்கி வந்து விற்பதையும் அப்பொழுது இருந்த

3. Revenue consultations vol 21 /1410 1798 pp. 4440 - 45

4. Commercial Despatch English vol - IV pp. 37-39 5. Ncc vol 49 / 13-10-1789 p.p.354