பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

— 1 - மறவர் சீமை

கலெக்டர்கள் பவுனியும், ஜாக்சனும் தடுத்தனர். மாற்றாக அவர்களது கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பல ஆண்டுகளாக மடித்துப் போன தானியங்களை விற்பதற்கு தகுந்த தருணமாக அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தினர். இவ்வாறு குடிமக்களுக்கு விரோதமான வகையில் மறவர் சீமையின் கிராமப் பொருளாதாரத்தையும் சமூக அமைதியையும் குலைத்து தங்களது கொள்ளையைத் தடையின்றி நடத்தி வந்தனர். வணிகம் செய்து லாபம் தேட வந்தவர்கள்தானே இந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார், வங்க மாநிலத்திற்கு அடுத்தபடியாக இந்தியப் பெருநாட்டில் தங்களது கால்களை வலுவாக ஊன்றுவதற்கும் ஆற்காடு நவாபிடமிருந்து அரசியல் சலுகைகளை அவர்கள் தமிழ்நாட்டிலும் பெற்று இருந்ததால், மறவர் சீமையில் கிடைத்ததுள்ள வாய்ப்பைத் தங்களது பகல் கொள்ளைக்கு ஏற்ற களமாகப் பயன்படுத்தினர். கதிரவன் ஒளி காயும் பொழுதே தானியத்தை உலர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நன்கு அறிந்தவர்கள் அவர்கள்.

இந்தக் கொள்ளை வியாபாரிகளது ஆட்சி, ம்றவர் சீமையில் மேலும் ஒரு மரபு வழியிலான நியாயம் வழங்கும் முறையையும் அடியோடு களைந்து விட முயன்றனர். ஊர்ப் பஞ்சாயத்தில் மக்கள் தீர்ப்பு வழங்கும் முறையை மாற்றி அவர்களுக்கு அவர்களது நாட்டு தண்டணை முறைச் சட்டத்தையும் இங்கு அமுல்படுத்தினர், புல்லர்ட்டன் போன்ற தளபதிகளின் இத்தகைய கடும் விமரிசனங்களை கூறியும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் விளைவுகளைச் சுட்டிக்காட்டியும் கூட கும்பெனித் தலைமை தனது அதிகார மமதையில் இருந்து விடுபடவில்லை. விளைவு?

மக்கள் இத்துணை இன்னல்களையும் எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக் கொள்வார்கள். தாயற்ற குழந்தைகளாக எவ்வளவு காலம்தான் தேம்பித் தேம்பி அழுது கொண்டு இருக்க முடியும்? இயல்பாகவே இந்த மக்களது இரத்தித்தில கலந்துள்ள தன்னிச்சையான உணர்வுகள், அடக்கு

6. Board of Revenue Proceedings vol 192 of 26-01-1798 p.565 7. Military Consultation vol 251. 27-03.1799 pp 1445