பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

மாவீரன் மயிலப்பன்

இப்படிக் கவலைப்பட்டுத் தமக்குத்தாமே ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவாறு மயிலப்பன் சேர்வைக்காரர் அவரை அறியாமலேயே அயர்ந்து உறங்கிவிட்டார். பல நாட்களாக ஊர் சுற்றிய பயணக் களைப்பு மாலை நேரத்தில் அங்குவந்த அமில்தாரின் வில்லைச் சேவகன் ஒருவன், அந்த அறையை எட்டிப் பார்த்துவிட்டு, "என்ன சேர்வைக்காரர் முடங்கிக் கிடக்கிறார். நல்ல உறக்கம் நன்றாக உறங்குங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு உறங்கப் போகிறீர்கள்! இன்று இராமநாதபுரம் கோட்டையிலிருந்து கலெக்டரது உத்தரவு வந்துவிடும் என்று ஏளனமாகச் சொல்லிச் சென்றது அவரது காதுகளில் மென்மையாக ஒலித்தது. கண்ணை விழித்துப் பார்த்தபொழுது மாலைப்பொழுது மயங்கி மறைந்து கொண்டிருந்தது. அந்த ஒளியில் அவரது அருகே ஒரு சட்டியில் கம்பங்கூழும் சிறிய பானை ஒன்றில் குடிநீரும் ஏற்கனவே பகல் உணவாக வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

பசி, தாகம், எல்லாம் எப்பொழுதோ எங்கேயோ சென்று மறைந்து விட்டனவே!

அவர் மீண்டும் கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தார்.

உறக்கம் மனிதனுக்கு இறைவன் வழங்கிய இணையற்ற அருட்கொடை, எவ்வித வேறுபாடும் இல்லாமல் வழங்கிய அற்புத சஞ்சீவி.

அன்றாட வாழ்க்கையில், இணையும் இன்ப, துன்ப உணர்வுகள்

மிகுந்த மனித ஜீவியத்திற்கு குந்தகம் ஏற்படாது செய்யும் தெய்வீகக் குளிகை?