பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ee = - = = - = - - = = =மறவர் சீமை

பதிலினைத் தெரிவிக்குமாறு பணித்தனர். சேர்வைக்காரரும் எவ்விதத் தயக்கமுமின்றி தனது வாக்கு மூலத்தை அளிக்கத் தொடங்கினார்.

மயிலப்பன் சேர்வைக்காரரின் மரண வாக்குமூலம்

நானும் எனது தோழர் சிங்கன் செட்டியுடன் சேர்ந்து முதுகளத்தூர் கச்சேரியைத் தாக்கினோம். எங்களுக்கு உதவியாக ஒன்பது சேர்வைக்காரரும் முன்னுறு பேர்களும் இந்தத் தாக்குதலில் கலந்து கொண்டனர். பிறகு நாங்கள் அபிராமம் கச்சேரிக்குச் சென்ற பொழுது அங்கிருந்த சிப்பாய்கள் எங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடமிருந்த துப்பாக்கிகளைப் பறித்தோம். அப்பொழுது ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார். பிறகு நாங்கள் கமுதி சென்றோம். கச்சேரியின் காவலில் இருந்த சிப்பாய்களிடமிருந்த துப்பாக்கிகளைக் கைப்பற்றினோம். இந்த நிகழ்ச்சியின் பொழுது, எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களுடன் மோதிய தாசில்தாரைப் பிடித்து அங்கு கட்டிப்போட்டோம். அவருக்காகப் பரிந்து வந்து எங்களுடன் மோதிய அவரது மருமகனுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. நானும் அங்கிருந்தவர்களும், அவருடைய காயத்திற்கு மருந்து தடவி கட்டுப் போட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். பின்னர் அங்கு சேர்வைக்காரர்களும் தேவர்மார்களும் கொண்ட ஒரு பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தி நமது கிளர்ச்சியின் உள்ளார்ந்த நோக்கம் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொன்னோம்.

இதற்கு முன்னர் கமுதி கச்சேரிக்கு அடுத்துள்ள பொட்டலில் சேகரம் பட்டறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கும்பெனியாரது தானியங்களைச் சூறைபோட்டோம். அனைத்து மக்களும் அதனை அள்ளிக்கொண்டு சென்றனர். இதனைபோலவே அன்று முற்பகலில் அபிராமம் சென்று இருந்தபொழுது அங்கிருந்த கும்பெனியாரது துணிக்கிடங்கையும் சூறையிட்டோம். கிளர்ச்சிக்காரர்கள் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தேவையான துணிகளையும் எடுத்துக்