பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

- =மறவர் சீமை

ஹெரான், பின்னர் ஜெனரல் லாரன்ஸ், அடுத்து தளபதி காலியாத், கி.பி.1756ல் கான்சாகிப் என்ற முகம்மது யூசுப்கான் இப்படி அணியணியாக வெள்ளைக்காரப் பட்டாளங்கள் நெல்லைச் சீமையில் குறுக்கும் நெடுக்குமாக அணிவகுத்து வலம் வந்தன. நெற்கட்டும் செவ்வல் பூலித்தேவர், பாஞ்சை கட்டபொம்மு நாயக்கர், எட்டயபுரம் கம்பளத்தார், சிவகிரி வன்னியன் போன்ற பிரதான பாளையக்காரர்களிடம் மோதிப் பலப்பரீட்சை நடத்தினர். கப்பத்தொகை வசூல், பரங்கிப்படையின் தீனிக்குக்கூடப் போதுமானதாக இல்லை. உழுதவன் கணக்குப்பார்த்த கதையாக கும்பெனியாரது கணக்கில் நவாப்பின் பற்றுத் தொகையாகக் கடன் ஏறிக்கொண்டு வந்தது. வேறு வழியில்லாமல் கும்பெனியாரது (கணக்கில் நவாப்பின் பற்றுத் தொகையாகக் கடன்) கணக்கைத் தீர்க்கும் முயற்சியில் கும்பெனி கவர்னருடன் ஆற்காடு நவாப் மேலும் சில உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுக் கொடுத்தாா.

இந்த ஒப்பந்தங்கள் விரைவில் தென்னகத்தின் ஆட்சியாளர்களாக கும்பெனியாரை நிலை நிறுத்திவிடும் என்ற தொலைநோக்கு நவாப்பின் சிந்தனையில் துளிர்க்கவில்லை. மாறாக அவரது அன்றைய கடன் தொல்லைகளுக்கு அவை தீர்வாகவும் அவரது வாழ்வின் தொடர்ச்சிக்குத் துணையாகவும் அமைந்துவிடும் என்ற தவறான எண்ணம் அவரிடம் மேலோங்கி இருந்தது. இதன் காரணமாக கி.பி.1787, 1790, 1792 ஆம் ஆண்டுகளில் கும்பெனியாருடன் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்" ஆற்காட்டு நவாப்பின் ஆதிக்கத்தையும் அதிகார வரம்பையும் சிறிது சிறிதாக அரித்து, அழித்து இரும்பை அளிக்கும் கறல்போல அமைந்துவிட்டன. தமிழகத்தின் சில பகுதிகளில் கும்பெனியார் ஆற்காட்டு நவாப்பிற்காக வரி வசூல் பணியை மேற்கொண்டனர். பின்னர் அந்த வசூல் தொகையில் ஒரு பகுதிய்ை நவாப்பின் பாக்கிக்காக வைத்துக் கொண்டனர். அடுத்து தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களது கோட்டை கொத்தளங்களைப் பராமரிக்கும் பணியையும், படைவீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பையும் கும்பெனியார் ஏற்றனர். இன்னும் மோசமானதொன்று,

16.Dr. Rajayyan - History of Madurai 1972.