பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

--- =மறவர் சீமை

முரணானது என்று முடிவு செய்த சேதுபதி மன்னர், கும்பெனியாரது கோரிக்கைகளைப் புறக்கணித்து வந்தார். சர்வ வல்லமையுள்ள கும்பெனியாரது ஒவ்வொரு கோரிக்கைக்கும் உதவ மறுக்கும் மனிதர் தமிழகத்தில் ஒருவர் இருக்கிறாரா?..... இருக்கிறாரே! ஹ9ம், இருக்கவே கூடாது! சென்னைக் கோட்டையில் உள்ள கும்பெனி ஆளுநரும், கல்கத்தா கோட்டையில் உள்ள கும்பெனித் தலைமையும் ஒரு மனதாக முடிவு செய்தன. சேதுபதி மன்னரது ஆட்சியை அகற்றிவிட வேண்டும் என்பதே அந்த முடிவு. கி.பி.1794ம் ஆண்டில் மிகவும் கடுமையான வறட்சி மறவர் சீமையில் நிலவியதால், கும்பெனியார் தங்களது திட்டத்தைச் செயல்படுத்தாமல் தக்க வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்து இருந்தனர்.

24- Military Consultations vol. 1794.