உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்

- _23

4. மீண்டும் சிறை

புத்தாண்டு பிறந்து விட்டது. தங்களது இரகசியத் திட்டத்தை நிறைவேற்றாமல் மேலும் தாமதப்படுத்த கும்பெனியாருக்குப் பொறுமை இல்லை. பிப்ரவரி மாதம் 7ம் தேதி வைகறை நேரம். இன்னும் நிலம் தெளியவில்லை. இராமநாதபுரம் கோட்டை அரண்மனைக் காவலில் ஈடுபட்டிருந்த சேர்வைக்காரர்களது கண்களில் உறக்கம் ஒட்டிக்கொண்டு இருந்தது. கோட்டையின் தெற்குப் புறத்தில் ஒருவிதமான ஆரவாரம். சிறிது நேரத்தில் புற்றீசல் போல ஒரு பெரும்படை கோட்டைக் காவலைத் தகர்த்து விட்டு உள்ளே நுழைந்தது. அரண்மனையையும் விரைவில் சூழ்ந்து கொண்டது. விழித்து எழுந்த முத்துராமலிங்க சேதுபதி மன்னரைக் கும்பெனித் தளபதி சந்தித்து இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றக் கும்பெனித் தலைமை அளித்துள்ள ஆணையைக் காண்பித்தார். சேதுபதி மன்னர் மீண்டும் பாதுகாப்புக் கைதி ஆக்கப்பட்டார். வீரர்களது பாதுகாப்பு அணியுடன் திருச்சிக் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இளமைக் கனவுகள் போல தமது திட்டம் தவிடு பொடியானது பற்றி சிறைக் கதவுகளின் பின்னே இருந்த மன்னருக்குப் பட்டது.

இராமநாதபுரம், இராமலிங்க விலாசம் அரண்மனை கலெக்டர் பவுணி துரையின்