உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

மாவீரன் மயிலப்பன்

பாஞ்சைப் பாளையக்காரரது குடிகள் கீழக்கரை வட்டாரத்தில் கொள்ளை நடத்தினர். நாகலாபுரம் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் அருப்புக்கோட்டை கோபாலபுரம் ஊர்களில் தங்களது கைவரிசையைக் காட்டினர். இந்தத்தாக்குதலை நடத்தியவர் நாகலாபுரம் பாளையக்காரரது தம்பி சின்ன நாயக்கரும் அவரது ஆட்களுமாவர்.

இவரும் பாஞ்சாலக்குறிச்சி பாளைய மக்களும் இணைந்து, சிவகிரியில் இருந்து பெருநாழி வழியாக இராமநாதபுரம் சென்று கொண்டிருந்த, கும்பெனியாரது கிஸ்திப் பணம் கொண்ட பொக்கிஷ வண்டியை வழிமறித்துத் தாக்கினர். சிறந்த போர் வீரர்களைக் கொண்ட கும்பெனியாரது அணியின் துப்பாக்கிச் சூட்டை இவர்களால் சமாளிக்க முடியவில்லை.

இன்னும் ஒரு துணிகரமான முயற்சியைக் கிளர்ச்சிக்காரர்கள் மேற்கொண்டனர். இராமநாதபுரம் கோட்டைக்கு எதிர்புறம் தென்கிழக்கில் அமைந்து இருந்த இராமநாதபுரம் சீமைக் கலெக்டரது மாளிகையைத் தாக்கிக் கலெக்டரைக் கொல்ல முயன்றன அதிர்ஷ்டவசமாகக் கலெக்டர் உயிர் தப்பினார். கிளர்ச்சியாளரது முயற்சி பயனற்றுப் போய்விட்டது.

இதற்கிடையில் முதுகளத்துார் பகுதி "கலகங்களில்" ஈடுபட்டவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமென்றும், "கலகத்தை" அடக்க உதவுபவர்களுக்கு (அதாவது கிளர்ச்சிக்காரர்களைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு) கும்பெனி அரசாங்கம் ஐநூறு சக்கரம் பணம் அன்பளிப்பு அளிக்க இருப்பதாகவும் குடிமக்களுக்கு விளம்பரம் செய்தார்.

நாட்டுப் பற்றும், ராஜ விசுவாசமும் பொங்கிப் பரிணமித்து பரங்கியர் எதிர்ப்பாக அசுர வடிவுடன் சீமையெங்கும் ஆல விருட்சமாகப் பரந்து நின்ற நிலையில், சுய நலமும் பேராசையுங்கொண்ட "சில பிறவிகள்" இந்தப் புனித சேது பூமியில்