பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்

11

7. தலைக்கு விலை

குமாரக்குறிச்சி, முதுகளத்துாருக்குத் தென்கிழக்கே உள்ள சிற்றுர். மிகவும், அமைதி நிறைந்த குடியிருப்பு. இருபது, முப்பது வீடுகளும், ஒரு மடமும் அங்கிருந்தன. வழிப்போக்கர்கள் போல சித்திரங்குடி சேர்வைக்காரரும், அவரது தோழர்களும் அங்கு தங்கி இருந்தனர்.

கமுதிக் கோட்டைப் போரில் ஏற்பட்ட தோல்வி. சிவகெங்கைச் சீமை மறவர்களது சகோதரத் துரோகம், சிங்கன் செட்டியின் தியாகம், கீழ்க்குளம் காட்டுப்போரில் சிவகெங்கை மறவர்களும் கும்பெனியாரும் நடத்திய பச்சைப் படுகொலை இவையனைத்தும் மாறி, மாறிச் சித்திரங்குடி சேர்வைக்காரரது மனத்தை அரித்துக்கொண்டு இருந்தன. அடுத்து என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்? என்ற வினாக்களுக்கிடையிலான முடிவடையாத திகைப்பு, அவரது மன திட்பத்தையும், சிந்தனைத் திறனையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

போதாக் குறைக்கு, முதுகளத்துர் சென்று வந்த நண்பர்கள் தெரிவித்த செய்திகள் வெந்த புண்ணில் வேல் உருவுவது போன்ற வேதனைச் சுமையை மிகுதிப் படுத்தின. பேரையூரில்,