பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - B 5 மாவீரன் மயிலப்பன் -

எவ்விதம் சகித்துக் கொள்வது என்பதை என்னால் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

அரசாங்கத்தினரது வெறுப்பிற்கு ஆளாகியுள்ள மயிலப்பனையும் அவனது கூட்டாளிகளையும் கைப்பற்றி ஒப்படைக்குமாறு கோரி இருந்தேன். இதுவரை எந்தப் பதிலும் வரப்பெறவில்லை. இப்பொழுதும், அதே கோரிக்கையை உமக்கு நினைவுறுத்தும் நிலையில்தான் உள்ளேன். இந்தக் கட்டளையை இப்பொழுதும் மதிக்காவிட்டால் அல்லது மதித்து நிறைவேற்றி அரசாங்கத்தின் திருப்தியைப் பெறாவிட்டால், கும்பெனியாரது பாதுகாப்பு உமக்கு எப்பொழுதும் இருக்காது என்பதைச் கட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உண்மையில் உம்மிடம் பணிந்து நடந்துகொள்ளும் மனோபாவம் இருந்தால், உமக்குப் பாதுகாப்பான வழியொன்று உள்ளது. அதாவது கொடுமை, சூழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிப் பிடித்தவர்களாக உம்மை வழி நடத்துபவர்கள் பலவீனமான ஆலோசனைப்படி நடந்துகொள்வதில் இருந்து நீங்கிக் கொள்ளவும். ஏனெனில், அவை உம் மீது வெறுப்பைத்தான் வளர்க்கும் கட்டனுாரில் நாம் சந்தித்தபொழுது, உமக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிப்பதாக உறுதி கூறினேன். கும்பெனியாருக்குப் பணிந்து கடமைகளை நிறைவேற்றும்வரை அந்த உறுதிமொழிக்கு மாறுபாடு இல்லை. அதனை நிரூபிக்கும் வாய்ப்பு இப்பொழுது எழுந்துள்ளது. உமக்குத் தேவையானது துரைத்தனத்தாரின் சலுகையா அல்லது சீற்றமா என்பதை இப்பொழுது தேர்வு செய்து கொள்ளும்”.

கலெக்டர் லூவிங்டனது கடிதம் சிவகெங்கைப் பிரதானியிடம் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நெல்லுக்குள் அரிசி என்ற இந்த ரகசியம் அவருக்குத் தெரியாதது அல்ல. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், துலாக்கோலைப் பிடித்து வணிகம் செய்ய