பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்=

அழகாக மலர்ந்து தோன்றியது.

"........................அவருக்கும் எனக்கும் போன வைகாசியில் கல்யாணம் நடந்து இருக்க வேண்டும். ஆனால் அவரது தகப்பனார் தங்களது அணியில் நின்று போரிட்டு கீழ்க்குளம் காட்டில் நடந்த சண்டையில் இறந்துவிட்டார். அதில் நின்று போன கலியாணம் நடக்கவில்லை".

அந்தப் பெண்ணின் குரலில் வேதனையும் ஏக்கமும் நிறைந்து இருந்தது. மேலும் அவள் சொல்வதைக் கேட்டு சேர்வைக்காரர் மெளனமாக நின்று கொண்டு இருந்தார்.

"................... மறவர் சாதிக்கு மரணத்தைப் பற்றி பயமே கிடையாது. சேதுபதி மகாராஜாவை சிறைமீட்க ஐயா கொண்டுள்ள கொள்கை நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் அதற்கு எவ்வளவு நாட்கள், மாதங்கள் ஆகும் என்பது தெரியாது. ஆதலால் ஒரே ஒருநாள் எனது மாமனை இங்கே அனுப்பி வைத்தால், ஊரார் முன்னிலையில் எனக்கு திருப்பூட்டிச் சென்றுவிடுவார். அப்புறம் அவர் வருவதற்குள் நான் இறந்துவிட்டால் ஒரு சுமங்கலியாகச் சாகிறோம் என்ற ஆத்ம திருப்தி இருக்கும். ஒரு வேளை இனி நடைபெறும் போர்களில் அவர் வீரசுவர்க்கம் எய்திவிட்டால், நான் வாழக்கூடிய நிலை ஏற்பட்டால் ஒரு வீரத்தியாகியின் மனைவி என்ற மனநிறைவுடன் வாழ்வேன்...... " என்று சொல்லி முடிப்பதற்குள் அவளது கண்களில் இருந்து அவளது உணர்வுகளையும் மீறி சில கண்ணித் துளிகள் அரும்பி கன்னங்களில் உருண்டு உதிர்ந்தன.

"தங்கச்சி" அழலாமா? கொஞ்ச நேரத்திற்கு முனனால்தானே சொன்னாய். மறவர் சாதிக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை என்று. நாம் பிறந்து வளர்ந்த மண்ணைக் காப்பது அதற்காக மடிவது நமது கடமை. மரணத்தைப் பற்றி நமது முன்னோர்கள் கவலைப்பட்டு இருந்தால், நமது சீமையில் சேதுபதி மன்னர்களது நல்லாட்சி நடந்து