பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 எரிமலையாக மாறி, தீப்பொறி பறக்கும் பல பாடல்களை உள்ளம் உருகி உணர்ச்சி பொங்கப் பாடினர். பாரதி தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, அறிந்த உண்மை களைத் தம் வாழ்க்கை அநுபவத்தை உரைகல்லாகக் கொண்டு, உயர்ந்த கற்பனையால் வெறுஞ் சொல்லோவிய மாகப் பாடாது, அழகான எளிய இனிய சொற்களை இசை நயத்துடன் கூட்டி உயிர்த்துடிப்புள்ள பாடல் களாகப் பாடியுள்ளார். பாரதியாரது கவிதைகள் அனைத்தும் சிந்தனைக்கு விருந்துாட்டுஞ் செஞ்சொற் சித்திரங்களாகும். பாரதியார் தமது உள்ளக் காட்சிகள் அனைத்தையும் எளிமையான நடையிலே, வலிமை, தெளிவு. மேன்மை, ஆழம், நேர்மை இவற்றுடன் பாடியுள்ளார். பாரதி தமிழ் இனத்தாரின் குரல் நமது எண்ணக் குமுறல்களேயெல்லாம் பாட்டிலே வடித் தெடுத்துக் கொடுத்தார். நம் நாட்டின் கிலே கண்டு இரங்கிக் கண்ணிர் வடித்து நெஞ்சம் குமுறி அருளா வேசத்துடன் கவிதைகளை அள்ளிக் கொடுத்தார். இருண்ட, கரடுமுரடான பாதையிலிருந்து நம்மை நேர்வழிக்கு இழுத்துச் சென்று வழிகாட்டினர். அரசியல், பொருளாதார, சமதர்மப் புரட்சிகளில் முனைந்து நின்று செயலாற்றிய முதற்கவிஞர் பாரதியே. இம்மூன்று புரட்சிகளையும், வெடிமருந்துபோன்று ஆற்றல் மிக்க அருந்தமிழ்ப்பாக்களால் ஆற்றினர். ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்து மக்கள் ஆர்த் தெழுந்தபொழுது புரட்சிக்கவி பாரதி, பெற்ற தாயும் பிறந்த பொன்டுைம் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்று மக்களுக்கு எடுத்துக்காட்டி,