பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பாரதியின் பாஞ்சாலி சபதம் தமிழகம் போற்றும் ஒரு தலே சிறந்த இலக்கியமாகும். மகாபாரதத்தில் வரும் ஒரு சிறு நிகழ்ச்சியைச் சித்திரிக்கும் புதுமைக் காவியம் பாஞ்சாலி சபதம். இக்காவியமும் காவிய இலக்கணப்படி கடவுள் வாழ்த்தோடு தொடங்கிக் கடல், நதி, மலே, நாடு, இயற்கை வருணனை முதலிய வருணனைகளையுடையதாய், அறம்வெல்லும், மறம் மாயும் ' என்னும் உண்மையினை இறுதியிலே உணர்த்தி நிற்கின்றது. பாண்டவர் சகுனியுடன் குதாடித் தோற்றமை, துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரிந்தமை. அதுகால் பாஞ்சாலி சபதம் செய்தமை ஆகியவற்றைப் பாஞ்சாலி சபதம் முன்கு சித்திரிக்கின்றது. இக்காவியத்தில் திருதராட்டினனை உயர்ந்த குணங்கள் உடையவனுகவும். பாஞ்சாலியை விடுதலைவேட்கை கொண்ட புதுமைப் பெண்ணுகவும் பாரதியார் பாடியுள்ளார். சொற்சுவை. பொருட்சுவை, எளிமை இவற்றை ஒருங்கே இந்நூலில் காணலாம். பாரதியார் திறமை மிக்க சொல்லோவியர் என்பதைப் பாஞ்சாலி சபதம் மூலம் நன்கு அறியலாம். பாஞ்சாலியைத் துச்சாதனன் அவைக்கு இழுத்துவரும் காட்சியை, == ' கக்கக்க வென்று கனைத்தே பெருமூடன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினக் கையினுற் பற்றிக் கரகரெனத்தானிழுத்தான் ஐயகோ வென்றே யலறி யுணர்வற்றுப் பாண்டவர் தந் தேவியவள் பாதியுயிர்கொண்டு நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்ருன் ” ருப்பதைப் படிக்குங்கால் துச்சா

என்று பாரதி பாடியி