பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வந்த காலமாகும். ஆனல் அக்கால உரைநடை பாமர மக்கள் எளிதில் புரியாத கிலேயிலே இருந்தது. எனவே பாரதியார் ஒளியும் தெளிவும் நிலவ எளிய நடையிலே கட்டுரைகள் பல எழுதினர். இவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் நல்ல கருத்துக் கருவூலங்களாக விளங்கு கின்றன. இதே போன்று, பாரதியாரின் கதைகளும் சுவை மிகுந்து விளங்குகின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருத்தை அடிப்படையாகக் கொண்டிலங்கு கின்றது. தமிழைப்போன்றே, பாரதியார் தெளிவாகவும். வலிமையாகவும், நயமாகவும் ஆங்கிலம் எழுதுவதிலும் வல்லுநராவர். - கட்டுரை நூல்கள் பாரதியாரது கட்டுரைத் தொகுதிகளில் ,ஒன்ருகிய தத்துவம் என்ற நூலிலே இருபத்தெட்டுக் கட்டுரைகள் உள்ளன. பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தி யாக இறைவனே வணங்கலாம் : அனைவர்க்கும் தியானம் என்பது அவசியம் : நாட்பொருத்தம் பார்த்து மக்கள் நாட்களை விணுக்குதல் மடமையாகும் ; நம்பிக்கையே காமதேனு நம்பிக்கை உண்டானல் வெற்றி உண் டாகும் : மதப் பிரிவ்களைக் கருதி மக்கள் பிரிந்து விடாது ஒன்றுபட்டு வாழவேண்டும்' போன்ற பல அரிய கருத்துக்களை இந்நூலிலே காணலாம். பதினேழு கட்டுரைகளடங்கிய மாதர் என்ற கட்டுரை நூலில் அவர் மாதரைச் செக்கு மாடுகளாகவோ அன்றி அடிமைகளாகவோ கருதுவது முற்றிலும் தவறு எனச் சுட்டிக் காட்டி, மாதர் தம் மனத்திற்கிசைந்தமனளன மணப்பதற்குத் தடை செய்தல் தவறு என்றும். மணம்