பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 படுத்தி விடலாமென்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்துகொள்ளவேண்டும். நம்மால் நன்ருக அறியப் படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்து முன் சித்தத்தை அறியவேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு. வந்தால் அதன் தன்மை முழுதையும் அறிய ஏது வுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்.' 'சித்தம் ஒரு கண்ணுடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்யுமானல் அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகமுண்டு.” எல்லா உயிர்களையும் சமமாகக் கருதவேண்டும். என்றும், சத்திய விரதத்தால் கடவுள் தன்மை பெறலாம் என்றும் கீதை கூறுவதாகத் தமது பகவத் கீதை' முன்னுரையில் பாரதியார் எடுத்துக் காட்டியுள்ளார். அவரது ஞானரதம் என்னும் உரைநடை நூல் கற்பனை கொழிக்கும் சுவைக் கேணியாகும். கற்பனை உலகில் ஞானரதமேறிச் சென்று கண்ட காட்சிகளை அவர் இந்நூலில் சுவைபடக் கூறியுள்ளார். ஞானரதத்தைப். பற்றி அவர் கூறும் விளக்கம் வருமாறு : சகல மனிதரிடத்திலும் ஈசன் ஞானரத மென்பதோர் தெய்விக ரதத்தைக் கொடுத்திருக். கின்ருர். அது விரும்பிய திசைகளுக்கெல்லாம். போய் விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்துவரக் கூடிய வல்லமை உடையது.' i இதுவரை எழுதியவாற்ருல் பாரதியாரது உரை ாடை. இன்பம் பயப்பதாகவும், உயிர் கிரம்பிய