பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 படித்த கதை. சங்கீதம் படிக்கப் போகிற கதை, மாணிக்கஞ் செட்டி மணி ஐயனை நகைத்த கதை, முதலிய கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கதைக் கொத்து என்னும் நூலில் பன்னிரண்டு கதைகளும் ஒரு சில கட்டுரைகளும் அடங்கியுள்ளன. இக்கதைகளில் பாரதியார் தம் வாழ்க்கையில் கண்ட சில நிகழ்ச் விகளே நயம்படக் கூறியுள்ளார். ஆங்காங்கே சில நல்ல கருத்துக்களையும் காணலாம். இவரது மூன்ரு வது நூலாகிய சந்திரிகை ஒரு நீண்ட கதையாகும். விசாலாட்சி என்ற பார்ப்பன இளங் கைம்பெண் அல்ல. லுற்று இறுதியில் விசுவநாத சர்மா என்ற இளங் துறவியை மணக்கிருள். முதல் மனைவியை இழந்த கோபால்சாமி ஐயங்கார் ஆயர்குல அணங்கின் மீது தெய்வீகக் காதல் கொண்டு அவளை மணந்து இகாள்ளு கிருர். இவ்விரண்டு கதைகளும் அடங்கியதே சிந்திரிகை என்னும் நூல். பாரதியார் கதைகள் அனைத்திலும் நகைச் சுவையினைக் காணலாம். ஆறிலொரு பங்கு ' என்னும் கதையில் வரும் பின்வரும் பகுதி சுவை பயப்ப தொன்ருகும். தமையனர்க்குக் கோட்டையிலே ரெவினியூ போர்டு ஆபீசில் உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஆபீசில் 10 ரூபாயும் வீட்டில் இரண்டு குழந்தைகளும் பிரமோஷன்.” - சந்திரிகை என்னும் நூலில் அவர் காதலைப் பற்றி திறம்படக் கூறியுள்ளார். அப்பகுதி வருமாறு: காதல் தெய்வீகமான து: அது மாருதது : A உண்மைக் காதல், கரடு, முரடானது ; காதலில்

  • * * - -