பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வெற்றி பெருதவன் முத்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது சிரமம் : உண்மைக் காதல் சீவன் முத்திக்குச் சாதனமாகும்: காதல் பாதையில் சிறிது தூரம் மனத்தளர்ச்சியின்றிப் பாவநெறியில் நழுவிச் செல்லாமல் உண்மையுடன் சென்ருல் இன்பத்தை இனிய நிலையில் காணலாம் ; காதல் வாழ்வு மனித வாழ்வை அமர வாழ்வாகச் செய்யும்.' முடிவுரை பாரதியார் கவிதை எழுதுவதில் அடைந்த வெற்றி யினைப் போன்று சிறுகதை எழுதுவதில் வெற்றி பெற்ருர் என்று சொல்லுவதற்கில்லே. உரை டையிலும் ஒரளவுதான் வெற்றி பெற்ருர் என்று சொல்லவேண்டும். விபவிடமாக, ஜனஸ்மூக பந்தம், பரம ச்ேசயம், மஹா சிந்தர ரூபி, மனுஷத் தமிழ் பாஷை, அக்ரஹாரம். பரஸ்பரம், ஸகல லெளகீக அநுபவங்கள் முதலிய பிற மொழிச் சொற்களை பல இடங்களிலும் இவர் கையாண் டுள்ளார். 'கோத்து, உட்கார்த்தி போன்ற சொற் பிழைகளும், ஒருமைப் பன்மைப் பிழைகளும், குறி பீட்டுப் பிழைகளும் பாரதியார் கதைகளில் காணப்ப்டு கின்றன. வானுலகில் காணும் அம்புலியிலோர் கறை காண்பதுபோல், குன்றுமணியிலோர் கருமை இருப்பது போல், பாரதியாரது கட்டுரை, கதை நூல்களில் மேற் சொன்ன ஒரு சில குறைகள் காணப்படுகின்றன. அவற்றை விடுத்து நிறைகளைக் கானின். * தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை சுவையூட்டம் தந்து சந்த அமைப்பினிலே ஆவேசம் இயற்கை