பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இம்ாாட்டு மன்னராய் ' விளங்குகின்ருேம். பாரதியின் கனவு கனவாகியது. இந்திய நாடு ஒன்று பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டு மென்று விரும்பியது அவர் உள்ளம். அதனை, " சிந்து நதிக்கரை நிலவினிலே சேரநன்னட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம் 7 என்று அவர் பாடியிருப்பதிலிருந்து நன்கு அறியலாம். மேலும் மக்கள் வாழ்க்கை ஒரே வழியில் அமைய வேண்டும் என்பதையும் விரும்பிய அவர், ' காசி நகர்ப் புலவர் பேசுமுரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம் תל என்று கூறியுள்ளார். அடுத்து நம் நாடு தனக்கு வேண்டிய பொருட்களைத் தானே உற்பத்தி செய்து உலகில் உயர்ந்து விளங்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். எனவேதான் அவர், f ' ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ” எனக் கூறியுள்ளார். ஆண்டை, அடிமை என்னும் வேறுபாடற்ற ஒரு சமுதாயத்தை நாட்டில் படைக்க எண்ணினர். ' ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லே ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே வாழி கல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே 'மனிதர் யாரும்ொரு நிகர் சமானமாக வாழ்வமே ’’ என்று அவர் பாடியிருப்பது மேற்சொன்ன கருத்சை