பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கவிமணி தமிழ் இலக்கிய வரலாற்றிலே பற்பல புதுமைகளை 1ற்படுத்திய நூற்ருண்டு இருபதாம் நூற்ருண்டாகும், துமை பல விளைவித்த இந்த நூற்ருண்டு தமிழகத்துக்குப் பல செல்வங்களே அளித்துள்ளது. அந்தச் செல்வத்துட் செல்வமே நம் கவிமணி. கவிமணி தமிழகத்தை வாழ வைக்க வந்த தவப்புதல்வர்களுள் தலையாயவர். களங்க மற்ற அவர்தம் பளிங்கு உள்ளத்தினின்றும் வெளிவந்த கவிமணிகளின் ஒளி இன்றும் தமிழகமெங்கணும் பரந்து சென்று திகழ்கிறது. அந்த ஒளியிலே மூழ்கித் திளைத்த உள்ளங்கள் பல ; தோன்றிய இளங் கவிஞர்கள் பலர். அவரது கவிதை ஒலி தமிழகத்தில் மட்டுமன்று தமிழ் மக்கள். தமிழறிந்த பிறமக்கள் எங்கெங்கு வாழ்கின் றனரோ, அங்கெலாம் கேட்டுக் கொண்டுதாணிருக்கிறது. அத்தகைய பெருமையுடைய கவிமணியவர்களைப் பற்றியும் அவர்தம் கவிமணிகள் பற்றியும் ஆராய முற்பட்டதின் விளைவே இக்கட்டுரையாகும். வாழ்க்கை வரலாறு புவிபுகழும் கவிமணியைப் பெற்றெடுத்த பெருமை நாஞ்சில் நாட்டுக்கு உரியதாகும். கவிமணியவர்களின் பெற்ருேர் சிவதாணு, ஆதிலக்குமி அம்மாள் ஆகியோ ராவர். இவர் பிறந்த ஆண்டு 1876 : ஊர் தேரூர். இக்கட்டுரை செந்தமிழ் என்னும் திங்கள் இதழில் ■ வெளிவந்தது. ot