பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 களுக்குப் பொன்னடை போர்த்திப் பரிசில் பல வழங்கிச் {յՈ n( "ار» را را ا ர். இன்னும் விதங்களிலே தமிழகம் அவ்வப்போது கவிமணிக்குத் தன் கடமைகளை ஆற்றி || |ள் | || „']yl. H. .تـی இவ்வாறு நாடும் ஏடும் போற்றப் புகழ் வாழ்வு வாழ்ந்து தமிழன்னைக்குக் கவிதைமாலேகள் பல சூட்டி வந்த கவிமணியவர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்தி ஆரும்நாள் நில்லா உலகப் புல்லிய வாழ்வு நீத்து நிலைத்த புகழ்க்கொடை பூண்டார். ஆம், தமிழன்னைக்கு மலர் கொய்து மாலை தொடுத்தே துரும்பென இளைத்த உடல் மறைந்துவிட்டது. ஆனல் அம் மலரும் மாலேயும் இன்றும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளித்துக் கொண்டும், மூக்கிற்கு நறுமணத்தை அளித்துக் கொண்டும் விளங்குகின்றது. அதன் மணம் என்றும் கமழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இலக்கிய வரலாற்றில் கவிமணிக்கு உரிய இடம் கவிமணியவர்கள் பிறகவிஞர்களைப் போலப் பாடி யிருப்பாரானல் அவர்களுக்குரிய இடம்தான் கவிமணிக் கும் கிடைத்திருக்கும். ஆனல் கவிமணியோ அவர்கள் போன்று பாடவில்லை; எந்த அரசியல் இயக்கத்திலும் சேரவில்லை; எவ்விதமான அரசியல் கட்சிக்கும் இரை யாகவில்லை; எனவே எந்தக் கொள்கைக்கும் தன் கவிதைகளே இரையர்க்கவில்லை. மாருகத் தன் நல்லுள் ளம் விரும்பியபடியே பாடினர். பழைய மரபிலே ாலூன்றிக் கொண்டே புதுமையைப் பாடினர். அதல்ை அவர் கவிதைகள் புதுமை மெருகும் பழமை