பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கவிமணியை விட எளிமையாகவும் இனிமையாக வும் தமிழ்ப் பாட்டுக்கள் பிறரால் பாட வருமா ? முடி யுமா ? என்பது ஐயமே. பிறரால் வேண்டுமானல் விமையாகப் பாட முடியும் . ஆனல் தமிழ் மரபு செ. மல் கவிமணிபோலப் பாட முடியும் என்று துணிந்து கூறுதற்கு இடமில்லை. தமிழ்ப்பற்றும், ஒரளவே கிரம்பிய தமிழறிவும் இருந்தால் போதும் : கவிமணியவர்களின் பாடல் பல வற்றையும் படித்துப் பொருள்புரிந்து உள்ளம் மகிழ லாம் : உலகை மறக்கலாம். அத்துணை எளிமை, இனிமை கவிமணியின் கவிதைகளிலே காட்சியளிக்கின்றன. ஒர் எடுத்துக்காட்டு கீழே தரப்பட்டுள்ளது. " தாகமென்று வந்தோர்க்குத் தண்ணிர் அளியாமல் ஆகமங்கள் ஓதி நிற்றல் அழகாமோ ? அறமாமோ ?” " ச்ாவியிட்டுப் பூட்டுமிட்டுச் சந்நிதியில் காவலிட்டுத் தேவிருக்கும் கோயிலை நீர் சிறைச்சாலை ஆக்கலாமோ ?” எனவே தமிழிலக்கியவரலாற்றிலே குழந்தைப் பாடல்கள் பாடியதின் மூலம் கவிமணியவர்கள் தனக் கென ஒரு தனியிடத்தை, பிறர்க்குக் கிடைக்காத, ஓரிடத்தை, சீரிய இடத்தைப் பெற்றுவிட்டார். அவரைப் பின்பற்றித் தற்போது சிலர் குழந்தைப் பாடல்களைப் பாடிவருகின்றனர். சுருங்க உரைப்பின் கவிமணியின்