பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 களுக்குப் போய்விடும் என்பதால், குடும்பத் தலைவர்கள் தங்கள் சொத்தை மேலும் பெருக்குவதில் அக்கறையின்றி. வாழலாயினர். இதல்ை குடும்பச் சொத்து வரவரக் கரைந்து போகலாயிற்று. குடும்பத்தலைவனுல் தன்மனைவி. மக்கள் அன்பை இதனால் இழக்க வேண்டியதாயிற்று. மருமக்களும் தாம் வேண்டியவாறே தம் மாமன் நடக்கா விட்டால் மாமனேக் குடும்பத்தினின்றும் விரட்ட முயலுவர். இதற்குப் பெரும்பாலும் வழக்கு மன்றத்தின் (கோர்ட்) துணையை நாடுவர். இதல்ை நாஞ்சில் நாட்டு மக்கள் தம் வாழ்நாளிலே பெரும்பகுதியை வழக்கு மன்றத்திலேயே கழித்தனர் சொத்தைத் தொலைத்தனர்; குடும்பங்கள் பல சிதறின வறுமை வளரத் தலைப் பட்டது. மேலும் ஒருவனே எத்தனை மனைவியரையும் வைத்துக்கொள்ளலாம் என்ற வழக்கமும் நாஞ்சில் நாட்டிலே நிலவியது. இதனுல் சொத்திருக்கிறிது என்ற திடத்திலே பலர் பலப்பல பெண்டிரை மணந்தனர். இதனுல் பல இளமனைவியர் தொல்லே பல படலாயினர். மணம் நடந்த சில நாளிலேயே கணவன் இறப்பான். சொத்தும் மருமக்களிடம் போய்விடும். அப்பொழுது அவர்கள் கண்ணிர் வெள்ளம் வடிக்க வேண்டியதுதான். இத்தகைய ஒரு சாபக்கேடான நிலைகண்டு கவிமணி, யவர்கள் உள்ளம் புழுங்கினர். அல்லும் எல்லும் இதனைப் பற்றியே எண்ணினர். இந்த வழக்கத்தை ஒழிப்பதைப் பற்றிப் பல நண்பர்களுடன் ஆராய்ங். தார். இவ்வழக்கத்தைக் கண்டித்து மலபார் குவார்ட்டலி' என்ற இதழில் ஆங்கிலத்திலே பல: கட்டுரைகள் எழுதினர். அதனைப் படித்த இளைஞர் கொதித்தெழுந்தனர் : மருமக்கள் தாயத்தை ஒழிக்க முனைந்தனர். சுடுகாடு நோக்கி நடைபோட்டுக் கொண்